கல்லுாரி ஆசிரியர்களுக்கான காலிப்பணியிட தேர்வில், கவுரவ விரிவுரையாளர் களுக்கு மட்டும் நேர்முகத் தேர்வு நடத்த தனியார் கல்லுாரி ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். தமிழகத்தில் உயர்கல்வித்துறை, அரசு கலைக்கல்லுாரிகளில் 2,381 காலிப்பணியிடங்கள் உள்ளன.
சில பணியிடங்கள் அண்ணாமலை பல்கலைக்கழகங்களில் உபரி ஆசிரியர்களைக் கொண்டு நிரப்பப்பட்டது.மீதி காலிப்பணியிடங்களை நிரப்ப அரசு முன் வந்துள்ளது. ஆன்-லைன் மூலம் தகுதியான ஆசிரியர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவித்தது.அதையொட்டி, தனியார் கல்லுாரி ஆசிரியர்கள் சிரமப்பட்டு அனுபவ சான்றிதழ்களை பெற்று தயாராக இருந்தனர்.
இந்நிலையில் அரசு கல்லுாரியில் கவுரவ விரிவுரையாளர்களாக பணியாற்றி வருபவர்களை நியமிக்க அரசு முயற்சிப்பதாக தனியார் கல்லுாரி ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
அரசு கல்லுாரிகளில் கவுரவ விரிவுரையாளர்களாக 5 ஆண்டுகள் பணியாற்றியவர்களுக்கு மட்டும் சென்னை, வேலுார், தர்மபுரி மண்டலங்களில் உள்ள ஆசிரியர்களுக்கான நேர்முகத்தேர்வு சென்னை, தரமணியில் இன்று நடக்கிறது.
அரசு கல்லுாரிகளில் கவுரவ விரிவுரையாளர்களாக பணியாற்றியவர்கள் மட்டும் பணியமர்த்தப்பட்டதால், தனியார் கல்லுாரிகளில் பல ஆண்டுகள் பணிபுரிந்தவர்களின் நிலை என்ன ஆவது என கேள்வி எழுப்பியுள்ளனர்.
எனவே தனியார் கல்லுாரிகளில் பணியாற்றியவர்களுக்கும் அரசு வாய்ப்பு வழங்க வேண்டும் என, வலியுறுத்தியுள்ளனர்.
0 Comments:
Post a Comment