அரசு ஐடிஐயில் விண்ணப்பிக்க கால அவசாகம்: கலெக்டர் தகவல் - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Wednesday, February 10, 2021

அரசு ஐடிஐயில் விண்ணப்பிக்க கால அவசாகம்: கலெக்டர் தகவல்


காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அரசு ஐடிஐயில் சேருவதற்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக, கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை. காஞ்சிபுரம் மாவட்டத்தில் புதிதாக துவங்கியுள்ள ஒரகடம் (சிப்காட் தொழிற் பூங்கா) அரசு மையத்துக்கு 100 சதவீத சேர்க்கை மேற்கொள்ளும் பொருட்டு வரும் 15ம் தேதிவரை மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. அதன்படி பயிற்சியில் சேர விரும்பும் மாணவர்கள் உரிய சான்றிதழ்களுடன், செங்கல்பட்டில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் உள்ள சேர்க்கை உதவி மையத்தை அணுகவும். 

தமிழகத்தில் மிகப்பெரிய தனியார் வேலைவாய்ப்பு முகாம் – மாவட்ட வாரியாக விரிவான தகவல்களுடன்மோட்டார் வாகன மெக்கானிக், ரெப்ரிஜிரேஷன் மற்றும் ஏர் கண்டிஷனிங், எலக்ட்ரீஷியன், எலக்ட்ரானிக்ஸ் மெக்கானிக் ஆகிய தொழிற்பிரிவுகளில் 2 ஆண்டுகள் படிக்க 10ம் வகுப்பு தேர்ச்சி, வெல்டர் பிரிவில் ஓராண்டு படிக்க 8ம் வகுப்பு தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டும். அரசு தொழிற்பயிற்சி நிலைய பயிற்சியில் சேரும் மாணவர்களுக்கு, பயிற்சி கட்டணம் இல்லை. 

வரும் 12ம் தேதி வேலை வாய்ப்பு முகாம் 

பயிற்சி பெறுபவர்களுக்கு அரசு உதவித்தொகையாக மாதந்தோறும் ரூ.750, சைக்கிள், லேப்டாப், 2 செட் சீருடைக்கான துணி, தையற்கூலி, இலவச புத்தகங்கள், சேப்டி ஷூ ஆகியவை இலவசமாக வழங்கப்படும். மேலும், விவரங்களுக்கு துணை இயக்குநர்/ முதல்வர், அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் செங்கல்பட்டு, தொலைபேசி 944019566, 6379090205 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.

Post Top Ad