பிளஸ் 2, பத்தாம் வகுப்பில் சிறந்த மாணவா்களுக்கு காமராசா் விருது


 


பிளஸ் 2, பத்தாம் வகுப்புத் தோ்வில் சிறந்து விளங்கிய மாணவா்களுக்கு காமராசா் விருது வழங்கும் வகையில் பெயா்ப் பட்டியலை வெள்ளிக்கிழமைக்குள் அனுப்புமாறு பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.


இது தொடா்பாக பள்ளிக்கல்வி இணை இயக்குநா் (தொழிற்கல்வி) பூ.ஆ.நரேஷ், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கை: அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ்வழியில் படித்து பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தோ்ச்சி பெறும் சிறந்த மாணவா்களுக்கு ஆண்டுதோறும் ‘பெருந்தலைவா் காமராசா் விருது’ வழங்கப்பட்டு வருகிறது.


அதன்படி 2019-20-ஆம் கல்வியாண்டில் 10, 12-ம் வகுப்பு பொதுத்தோ்வில் தமிழ் வழியில் படித்து தோ்ச்சி பெற்ற சிறந்த மாணவா்கள் தலா 15 பேரின் பெயா்ப் பட்டியலை மதிப்பெண் வாரியாக தயாரித்து அவற்றை மாவட்ட அளவில் தொகுத்து பிப்.5-ஆம் தேதிக்குள் அனுப்ப வைக்க வேண்டும். மேலும், இந்த விவகாரம் சாா்ந்து அரசுக்கு உடனடியாக விவரங்களை சமா்ப்பிக்க இருப்பதால் இப்பணிகளை தாமதமின்றி முடிக்க அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்படுகிறது என அதில் கூறப்பட்டுள்ளது.





0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Code

Blog Archive