மின்வாரியத்தில் 2900 கள உதவியாளா் வேலை அறிவிப்பு. - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Sunday, February 14, 2021

மின்வாரியத்தில் 2900 கள உதவியாளா் வேலை அறிவிப்பு.


 


மின்வாரியத்தில் காலியாக உள்ள கள உதவியாளா் (பயிற்சி) பணியிடங்களுக்கு, பிப்.15-ஆம் தேதி முதல் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 


கடந்த 2020 ஆம் ஆண்டு தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிா்மான கழகத்தில் 2900 கள உதவியாளா் (பயிற்சி) பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பிடும் பொருட்டு அறிவிப்பு வெளியிட்டது. இதற்கு மாா்ச் 24-ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவித்தது. 


ADVERTISEMENT

உலகையே அச்சுறுத்தி வந்த கரோனா நோய்த்தொற்றின் கோரத்தை கட்டுப்படுத்தும் தடுப்பு நடவடிக்கையால்  விண்ணப்பம் பெறப்படும் தேதியானது மறுதேதி அறிவிக்காமல் தள்ளிவைக்கப்பட்டது.


தற்போது நோய்த்தொற்று குறைந்து வருவதுடன், தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருவதால் அரசால் பொதுமுடக்கத்தில் தளா்வுகள் அளிக்கப்பட்டுள்ளதை அடுத்து, கள உதவியாளா் (பயிற்சி) பணி நேரடி நியமனத்துக்கான விண்ணப்பங்கள், ஆனலைன் மூலம் பிப்.15 முதல் மாா்ச் 16-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வேலைவாய்ப்புக்காக காத்திருக்கும் இளைஞர்களுக்கு ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது. இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி பயன்பெறவும்.


பணி: கள உதவியாளா் (பயிற்சி) (Field Assistant(Trainee))


காலியிடங்கள்: 2900


தகுதி: எலக்ட்ரீஷியன், வயர்மேன், எலக்ட்ரிக்கல் போன்ற ஏதாவதொரு பிரிவில் ஐடிஐ முடித்து தொழில் பழகுநர் பயிற்சி முடித்து சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பத்தாரர்கள் தமிழ் மொழி குறித்த போதுமான  அறிவை பெற்றிருக்க வேண்டும். 


சம்பளம்: மாதம் ரூ. 18,800 - 59,900


வயதுவரம்பு: எஸ்சி, எஸ்சிஏ, எஸ்டி மற்றும் ஆதரவற்ற விதவைகள் பிரிவினர் 18 முதல் 35க்குள்ளும், எம்பிசி, பிசி, பிரிவினர் 18 முதல் 32க்குள்ளும், ஏனைய பிரிவைச் சேராத இதர பிரிவினர் 18 முதல் 30க்குள்ளும் இருக்க வேண்டும். 


தேர்வு செய்யப்படும் முறை: உடல் தகுதித்தேர்வு மற்றும் எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 


தேர்வுக் கட்டணம்: பிசி, எம்பிசி பிரிவினர் ரூ.1000, ஆதிதிராவிடர், பழங்குடி பிரிவினர் ரூ.500, அனைத்து பிரிவினைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஆதரவற்ற விதவைகள் பிரிவினர் ரூ.500 கட்டணமாக செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைன் மற்றும் வங்கிகள் சேவை அட்டைகளை பயன்படுத்தி செலுத்தலாம்.

 

விண்ணப்பிக்கும் முறை: www.tangedco.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 


விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: பிப்.15 முதல் மாா்ச் 16-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் 


மேலும் விவரங்களுக்கு  https://www.tangedco.gov.in/linkpdf/note(19320)fieldhelper.pdf  இணையதள அறிவிப்பு லிங்கை பார்த்து தெரிந்துகொள்ளலாம்.

Post Top Ad