அரசு தொழிற்பயிற்சி மையங்களில் மாணவர் சேர்க்கை – பிப்.,15 வரை வாய்ப்பு!


ராமநாதபுரத்தில் அரசு தொழிற்பயிற்சி மையத்தில் கணினி பிரிவு படிப்பில் மாணவிகள் சேருவதற்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பிப்ரவரி 15ம் தேதி வரை விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அரசு தொழிற்பயிற்சி மையம்:
மத்திய அரசின் கட்டுப்பாட்டில், மாநில அரசின் நேரடி நிர்வாகத்தின் கீழ் அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் நடத்தப்படுகின்றது. மொத்தம் 2284 அரசு தொழிற்பயிற்சி மையங்கள் உள்ளது. அரசு தொழிற்பயிற்சி மையத்தில் பல பாடப்பிரிவுகள் உள்ளது. மாணவர்கள் தாங்கள் தேர்வு செய்யும் பாடத்தின் அடிப்படையில் ஒரு வருடம் அல்லது இரண்டு வருடங்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறார்கள். பயிற்சியின் பின்னர் தேர்வுகள் நடத்தப்பட்டு தேசிய தொழிற்பயிற்சி சான்றிதழ் வழங்கப்படுகிறது. ராமநாதபுரம் மாவட்டம்:
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி மையங்களில் நடப்பு ஆண்டுக்கான மாணவ – மாணவியர் சேர்க்கை நடந்து வருகிறது. இங்கு 10ம் வகுப்பு மாணவ, மாணவியர் பயிற்சியில் சேரலாம். இந்நிலையில் ராமநாதபுர மாவட்டத்தில் உள்ள தொழிற்பயிற்சி மையத்தில் கணினி பிரிவில் கணினி பராமரிப்பு மற்றும் கணினி இயக்குதல் பிரிவில் மாணவிகள் சேருவதற்கு காலிப்பணியிடங்கள் இருப்பதாக மாவட்ட பயிற்சி மைய இயக்குனர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

காலியிடங்கள்:
இம்மையத்தில் மொத்தம் 240 இடங்களில் 226 இடங்கள் பூர்த்தியாகியுள்ளது. கணினி பிரிவில் 48 இடங்களில் 34 பேர் இணைந்துள்ளனர். மீதம் உள்ள 14 இடங்களில் சேருவதற்கு மாணவிகள் பிப்ரவரி 15ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். மேலும் ராமநாதபுர மாவட்டத்தில் பரமக்குடி மற்றும் முதுகுளத்தூர் மையங்களிலும் தொழிற்பயிற்சி மையத்தில் காலியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது




0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Code

Blog Archive