பொதுத் தேர்வுகளை எளிதாக்குவது, பாடத் திட்டங்களின் சுமைகளை குறைப்பது, 10, பிளஸ் 2 என்ற நடைமுறையை, 5+3+3+4 என மாற்றி அமைப்பது, ஐந்தாம் வகுப்பு வரை, தாய்மொழி அல்லது பிராந்திய மொழியில் கல்வி கற்பது உட்பட பல்வேறு சீர்திருத்தங்களை உடைய புதிய கல்விக் கொள்கை, கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது
.இந்நிலையில், நேற்றைய பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளதாவது: புதிய கல்விக் கொள்கையின் அனைத்து அம்சங்களும், 15 ஆயிரம் பள்ளிகளில் முதல்கட்டமாக செயல்படுத்தப்பட உள்ளன.இந்த பள்ளிகளை முன்மாதிரியாக வைத்து, அப்பகுதிகளில் உள்ள மற்ற பள்ளிகளில், படிப்படியாக இத்திட்டம் செயல்படுத்தப்படும்.மேலும், ராணுவ அமைச்சகத்தின் கீழ் தற்போது, 30 சைனிக் பள்ளிகள் நாடு முழுதும் இயங்கி வருகின்றன.தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், தனியார் பள்ளிகளுடன் இணைந்து, மேலும், 100 சைனிக் பள்ளிகள் துவங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.