நாளை (பிப்.13) அமைச்சரவை கூட்டம் சலுகைகள் அறிவிக்க ஒப்புதல்?



 தமிழக அமைச்சரவை கூட்டம், நாளை (பிப்.13) நடக்க உள்ளது.

தமிழக அரசு சார்பில், இம்மாதம் கடைசி வாரத்தில், இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. சட்டசபை தேர்தலையொட்டி, பட்ஜெட்டில், முக்கிய அறிவிப்புகள் இடம் பெற உள்ளன.

  மேலும், பட்ஜெட் கூட்டத் தொடரில், பெண்களை கவரும் வகையில், பல்வேறு சலுகைகள் மற்றும் புதிய திட்டங்களை, 110 விதியின் கீழ், முதல்வர் அறிவிக்க உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.

இவற்றுக்கு ஒப்புதல் அளிப்பதற்காக, தமிழக அமைச்சரவை கூட்டம், நாளை காலை, 11:30 மணிக்கு, தலைமைச் செயலகத்தில், முதல்வர் இ.பி.எஸ்., தலைமையில் நடக்க உள்ளது.





0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Code

Blog Archive