Whatsapp Bankஐ தொடங்கியது Bank of Baroda - வீட்டிலேயே கிடைக்கும் வங்கிச்சேவை - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Tuesday, January 5, 2021

Whatsapp Bankஐ தொடங்கியது Bank of Baroda - வீட்டிலேயே கிடைக்கும் வங்கிச்சேவை


எந்த செயலிகளின் துணை இல்லாமல் அனைத்து வங்கிச் சேவைகளையும் வாட்ஸ் ஆப் மூலம் பெறும் வசதியை பாங்க் ஆப் பரோடா அறிமுகப்படுத்தியுள்ளது.

மத்திய அரசு டிஜிட்டல் தொழில்நுட்ப பயன்பாட்டுக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. குறிப்பாக, பணமதிப்பிழப்பு நடவடிக்கை அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு மின்னணு பணப்பரிவர்த்தனை வேகமெடுத்தது. நாடு முழுவதும் உள்ள வங்கிகள், தங்களின் சேவைகளை மின்னணு தொழிட்நுட்பத்தில் வழங்க அரம்பித்தன. ஆன்லைன் மூலம் பணப்பரிமாற்றங்களை மேற்கொள்பவர்களுக்கு கூடுதல் சலுகைகளை வழங்கின. கொரோனா காலத்தில் மின்னணு பணப்பரிவர்த்தனை புதிய உச்சத்தை தொட்டது.

Paytm, google pay, phone pe நிறுவனங்கள் புதிய செயலிகளை அறிமுகப்படுத்தி மொபைல் வங்கிச்சேவைகளை கொடுத்தனர். மொபைல் வங்கிச்சேவையில் UPI- ஐடி உருவாக்கப்பட்டு QR code ஸ்கேன் செய்து பணப்பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. மொபைல் வங்கிச்சேவையில் குதித்த நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை ஈர்க்க புதிய கேஷ்பேக் ஆஃபர்களையும் வழங்கினர். இதனால் வங்கிச் சேவைகளை எளிமையானது. இதேபோல்,எஸ்பிஐ வங்கியில் யோனோ, ஐசிஐசிஐ வங்கியில் ஐமொபைல் சேவையும் வழங்கப்படுகிறது. இதிலிருந்து தனித்துவமாக bank of baroda வங்கி புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது 24 மணி நேரமும் செயல்படும் வாட்ஸ் ஆப் வங்கிச் சேவையை அந்த வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சேவையை பேங்க் ஆப் பரோடா வங்கி வாடிக்கையாளர்கள் மட்டுமின்றி அனைத்து வங்கி வாடிக்கையாளர்களும் பயன்படுத்தலாம் என்பது கூடுதல் சிறப்பம்சமாகும்.

இந்த வசதியைப் பெறுவதற்கு, ஒரு நபர் தங்கள் தொடர்புகளில் பாங்க் ஆப் பரோடாவின் வாட்ஸ்அப் எண்ணை '8433 888 777' சேமித்து, அந்த எண்ணுக்கு 'ஹாய்' செய்தியை அனுப்ப வேண்டும். அதில், வங்கிக்கணக்கில் இருக்கும் இருப்பு தொகை விவரம், காசோலை (Cheque book) கோரிக்கை, டெபிட் கார்டு பிளாக் உள்ளிட்ட பல சேவைகளையும் வழங்குகிறது. இதற்காக பிரத்யேகமாக நீங்கள் செயலி ஒன்றை டவுன்லோடு செய்ய தேவையில்லை. வாரம் முழுவதும் 24 மணி நேரமும் உங்கள் வாட்ஸ் ஆப் மூலம் அனைத்து வங்கிச் சேவைகளையும் பயன்படுத்தலாம் Android மற்றும் iOS மாடல் செல்போன் வைத்திருப்பவர்கள் கீழ்கண்ட வழிமுறைகளை பின்பற்றி Bank Of Baroda -வின் What's App வங்கிச் சேவைகளை பெறலாம்.

step 1: உங்கள் contact -ல் பரோடா bank -ன் வாட்ஸ்அப் எண் '8433 888 777' ஐ சேமிக்கவும்.

step 2: இந்த எண்ணுக்கு 'Hi' செய்தியை அனுப்பவும்

step 3: உங்கள் எண்ணுக்கு bank of baroda -ன் சேவை செயல்படுத்தப்பட்டதாக வங்கியில் இருந்து ஒரு செய்தி வரும்

step 4: நாளின் எந்த நேரத்திலும் உங்கள் வசதிக்கு ஏற்ப இந்த வசதியைப் பயன்படுத்துங்கள்.

உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Post Top Ad