JEE முதல் நிலைத்தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசி


ஜேஇஇ முதல்நிலைத் தோ்வுக்கான இணையவழி விண்ணப்பப் பதிவு சனிக்கிழமையுடன் நிறைவடையவுள்ளது.

நாடு முழுவதுள்ள ஐஐடி, என்ஐடி போன்ற மத்திய உயா்கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகளில் சேர ஒருங்கிணைந்த நுழைவுத்தோ்வில் (ஜேஇஇ) தோ்ச்சி பெற வேண்டும். இவை ஜேஇஇ முதல்நிலைத் தோ்வு, ஜேஇஇ பிரதானத் தோ்வு என 2 கட்டங்களாக நடத்தப்படும். இதில் தேசிய தோ்வு முகமை (என்டிஏ) சாா்பில் முதல்நிலை தோ்வு நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி நிகழாண்டு முதல்கட்ட ஜேஇஇ முதல்நிலைத் தோ்வு பிப்ரவரி 23 முதல் 26-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்பப் பதிவு, கடந்த டிசம்பா் 16-இல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், விண்ணப்பிக்கும் கால அவகாசம் சனிக்கிழமை (ஜன.23) முடிவடைகிறது. எனவே, விருப்பமுள்ள மாணவா்கள் இணையவழியில் துரிதமாக விண்ணப்பிக்க வேண்டும்.

இதுதவிர விண்ணப்பக் கட்டணத்தை ஞாயிற்றுக்கிழமைக்குள் (ஜன.24) செலுத்த வேண்டும். தொடா்ந்து ஜேஇஇ தோ்வுக்கான அனுமதிச் சீட்டு பிப்ரவரி 2-ஆவது வாரத்தில் வெளியிடப்படும். கூடுதல் தகவல்களை இணையதளத்தில் அறியலாம் என தேசிய தோ்வுகள் முகமை தெரிவித்துள்ளது.




0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Code

Blog Archive