டான்செட்' நுழைவு தேர்வு இன்று முதல் விண்ணப்பம் - DINAMALAR

'

 சென்னை : 'டான்செட்' நுழைவுத் தேர்வு, மார்ச் 20, 21ல் நடக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில், எம்.பி.ஏ., -- எம்.சி.ஏ., -- எம்.இ., -- எம்.ஆர்க்., -- எம்.பிளான் போன்ற முதுகலை பட்டப் படிப்புகளில், 2021 -- 22ம் கல்வியாண்டில் சேர விரும்பும் மாணவர்களுக்காக, அண்ணா பல்கலை சார்பில், 'டான்செட்' என்ற, பொது நுழைவுத் தேர்வு நடத்தப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பு, நேற்று வெளியானது. இதன்படி, பொது நுழைவுத் தேர்வு, மார்ச், 20, 21ல் நடக்கும். நுழைவுத் தேர்வு எழுத விரும்புவோர், https://tancet.annauniv.edu/tancet என்ற இணையதளத்தில், இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.விண்ணப்பிக்க, பிப்., 12 கடைசி நாள். ஆன்லைன் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.மேலும் விபரங்களுக்கு, 044 -- 2235 8289 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.





0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Code

Blog Archive