ஆசிரியர் தகுதி தேர்வு 'ஹால் டிக்கெட்' வெளியீடு
மத்திய ஆசிரியர் தகுதி தேர்வுக்கு, 'ஹால் டிக்கெட்' வெளியிடப்பட்டுள்ளது.
மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், ஆசிரியர் பணியில் சேர, மத்திய ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இந்த ஆண்டுக்கான தகுதி தேர்வு, வரும், 31ம் தேதி, நாடு முழுதும் நடக்கிறது. இதற்கு விண்ணப்பித்தவர்களுக்கு, ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள், ஆசிரியர் தகுதி தேர்வு இணையதளத்தில் பதிவிறக்கம் செய்ய லாம் என, சி.பி.எஸ்.இ.,அறிவித்துள்ளது.