C மற்றும் D பிரிவு அரசு ஊழியர்களுக்கு பொங்கல் மிகை ஊதியம் அரசாணை வெளியீடு


தமிழக அரசு ஆரியர்கள் மற்றும் அரசு பணியாளர்களுக்கு பொங்கல் மிகை ஊதியம் வழங்கி அரசாணை பிறப்பித்துள்ளது.அதன்படி

முறையான காலமுறைச் சம்பளம் பெறும் அனைத்து ”C” மற்றும் “D” பிரிவுஅரசப் பணியாளர்கள், உள்ளாட்சி மன்றப் பணியாளர்கள், அரசின் மானியம் பெறும் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் காலமுறைச் சம்பளம் பெறும் ஆசிரியர்கள் / பணியாளர்கள் ஆகியோருக்கு திங்களொன்றுக்கு 30 நாட்கள் என்ற அடிப்படையில், 30 நாட்கள் ஊதியத்திற்கு இணையான தொகையை 2019-2020-ம் கணக்காண்டிற்கு தற்காலிக மிகை ஊதியம் மற்றும் சில்லறை செலவினத்தின் கீழ் மாத அடிப்படையில் நிலையான ஊதியம் பெற்று வந்த முழு நேர மற்றும் பகுதி நேரப் பணியாளர்கள் மற்றும் சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் பணியாளர்களுக்கு சிறப்பு தற்காலிக மிகை ஊதியம் பொங்கல் பண்டிகை கொண்டாடிட ஏதுவாக வழங்க அரசு முடிவெடுத்துள்ளது.

2. மேலே படிக்கப்பட்ட அரசாணையின்படி 2018-2019-ஆம் கணக்காண்டிற்கு C” மற்றும் “D” பிரிவு சார்ந்த பணியாளர்கள், உள்ளாட்சி மன்றப் பணியாளர்கள், அரசு மானியம் பெறும் சுல்வி நிறுவனங்களின் பணியாளர்கள் ஆகியோருக்கு திங்களொன்றுக்கு 30 நாட்கள் என்ற அடிப்படையில், 30 நாட்கள் ஊதியத்திற்கு இணையான தொகையை தற்காலிக மிகை ஊதியமாக்க் கணக்கிடடு, உச்சவரம்பினை ரூ.3,000/- ஆகக் கொண்டு, தற்காலிக மிகை ஊதியத் தொகை வழங்கப்பட்டது

3. 2019-2020-ஆம் கணக்காண்டிற்கு “C”மற்றும் “D” பிரிவு சார்ந்த, முறையானகாலமுறைச் சம்பளம் பெறும் அனைத்து நிரந்தர மற்றும் தற்காலிக அரசுப் பணியாளர்கள், உள்ளாட்சி மன்றப் பணியாளர்கள், அரசு மானியம் பெறும் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் ஆசிரியாகள்ண பணியாளர்கள் ஆகியோருக்கு திங்களொன்றுக்கு 30 நாட்கள் என்ற அடிப்படையில் ரூ.3,000/- என்ற உச்சவரம்பிற்கு உட்பட்டு தற்காலிக மிகை ஊதியமாக வழங்கிட அரசு ஆணையிடுகிது 

Pongal Bonus GONO 1 Date 04.01.2021 PDF 





0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Code

Blog Archive