வந்துவிட்டது வாட்ஸ் அப்புக்கு போட்டியாக தமிழத்தின் அரட்டை ஆப் - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Saturday, January 16, 2021

வந்துவிட்டது வாட்ஸ் அப்புக்கு போட்டியாக தமிழத்தின் அரட்டை ஆப்


வாட்ஸ் அப், டெலிகிராம், சிக்னல் போன்ற மேசேஜிங் செயலியை ஜோஜோ கார்ப்பரேஷன் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

வாட்ஸ்அப் நிறுவனத்தின் பிரைவசி பாலிசி மாற்றத்திற்கு பின் இந்த செயலிக்கு மாற்றாக  சிக்னல், டெலிகிராம் போன்றவற்றை இன்ஸ்டால் செய்து வருகின்றனர்.

இவர்களின் தேடலுக்கு பதில் கொடுக்கும் வகையில், சோஹோ கார்ப்பரேஷன் நிறுவனத்தின் உருவாகி இருக்கிறது.

சென்னையை தலைமையிடமாக கொண்டு இயங்கும் சோஹோ கார்ப்பரேஷன்  நிறுவனத்தை தென்காசியை சேர்ந்த ஸ்ரீதர் வேம்பு என்பவர் துவங்கி இருக்கிறார். அந்த நிறுவனத்தின் அரட்டை செயலி   தற்போது WhatsApp'ஐ வீழ்த்துமா என்பதை பொறுத்திருந்து பார்போம்

தற்போது Zoho நிறுவனம் Arratai செயலியை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு Google play Store'ல் வெளியிட்டுள்ளது.இந்த செயலியின் Logoவையும் அரட்டை என்பதை குறிப்பிடுவதற்காக 'அ' என்றும் வைத்துள்ளனர்.

அரட்டையின்  சிறப்புகள் என்ன?


1. இந்தியாவில் தமிழகத்தில் வடிவமைக்கப்பட்ட செயலி.


2. மூன்றாம் தரப்பு செயலிகளுக்கு, நிறுவனங்களுக்கு தனிநபர் தகவல்கள் பகிரப்பட மாட்டாது.


3. ஒரு குழுவில் 1,000 பேர் உரையாட இயலும்.


4. 6 நபர் vஅரை வீடியோ கால் அழைப்பில் இணையலாம்.


செயலி உபயோக்கிக்க தேவையான அடிப்படை விபரங்கள் மட்டுமே சேகரிக்கப்படும்.இவை மற்ற நிறுவனங்களுக்கு பகிரப்பட மாட்டாது என கூறியுள்ளனர்.


அரட்டை ஆப் டவுன்லோடு செய்ய


https://play.google.com/store/apps/details?id=com.aratai.chat&hl=en_SG

Post Top Ad