ஐடிபிஐ வங்கியில் சிறப்பு அதிகாரி வேலை: பட்டதாரிகளுக்கு வாய்ப்பு! - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Saturday, January 2, 2021

ஐடிபிஐ வங்கியில் சிறப்பு அதிகாரி வேலை: பட்டதாரிகளுக்கு வாய்ப்பு!


மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் இந்திய அரசின் தொழில் வளர்ச்சி வங்கியான இந்தியத் தொழில் மேம்பாட்டு வங்கியான ஐடிபிஐ வங்கியில் நிரப்பப்பட உள்ள சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள பட்டதாரிகளிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண்.1/ 2020-21

நிறுவனம்: இந்தியத் தொழில் மேம்பாட்டு வங்கி

மொத்த காலியிடங்கள்: 134

பணி: Specialist Cadre Officers
1. DGM (Grade D) - 11
வயதுவரம்பு: 35 முதல் 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.

2. AGM (Grade C) - 52
வயதுவரம்பு: 28 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

3. Manager ( Grade B) - 62
வயதுவரம்பு: 25 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

4. Assistant Manager (Grade A) - 09
வயதுவரம்பு: 21 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பிஇ, பி.டெக், பி.எஸ்டி., இளங்கலை, முதுகலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.விரிவான விவரங்களுக்கு அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தேர்வு செய்யப்படும் முறை: தெரிவுத் தேவு(ஸ்கிரினீங் தேர்வு), குழு விவாதம் மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.idbibank.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்கள் ரூ.150 செலுத்த வேண்டும். மற்ற அனைத்து பிரிவினரும் ரூ.700 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

மேலும் விவரங்கள் அறிய https://www.idbibank.in/pdf/careers/DetailedAdvertisementSpecialists2020-21.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 07.01.2021

Post Top Ad