ஆன்லைன் வகுப்புகளுக்கு பொங்கல் பண்டிகை விடுமுறை – பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு!!
தமிழகத்தில் கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்த கடந்த மார்ச் மாதம் பள்ளிகள் மூடப்பட்டன. இந்நிலையில் தற்போது வரை பள்ளிகள் திறப்பது குறித்து அறிவிப்பு வெளியிடாததால் ஆன்லைன் மூலமாக மாணவர்கள் பாடங்களை கற்று வருகின்றனர். இந்நிலையில் பொங்கல் பண்டிகை வருவதால் ஆன்லைன் வகுப்பிற்கு விடுமுறை அளிப்பதாக கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
பள்ளிகளுக்கு விடுமுறை:
கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்த பள்ளிகள் கடந்த மார்ச் மாதம் மூடப்பட்டன. இந்நிலையில் நோய் பரவல் குறைந்து வருவதால் கல்லூரிகளில் இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் தொடங்கப்பட்டன. தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து எந்த அறிவிப்பும் இதுவரை வெளியிடப்படவில்லை. இந்தியாவில் பல மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் வருகிற ஜனவரி 14 முதல் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளதால் ஆன்லைன் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு விடுமுறை அளிப்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அரசாணை விரைவில் வெளியிடப்படும் எனத் தெரிவித்தார். பொங்கல் பண்டிகைக்கு பிறகு பள்ளிகள் திறப்பது குறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.
பள்ளிகள் திறப்பது குறித்து மத்திய அரசு மாநிலங்களின் தனிப்பட்ட முடிவு என்று கூறிய நிலையில், சில மாநில அரசுகள் பள்ளிகளை இந்த மாதம் முதல் திறந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும். தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து பெற்றோர்களிடம் கருத்து கேட்பு இந்த வாரம் இறுதி வரை நடைபெறும் நிலையில், பள்ளிகள் திறப்பது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் என பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.