சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகள்: இருப்பு பட்டியல் வெளியீடு. - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Tuesday, January 5, 2021

சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகள்: இருப்பு பட்டியல் வெளியீடு.


 


2019 -ம் ஆண்டுக்கான சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகள் ஏற்கெனவே வெளியான நிலையில் இருப்பு பட்டியல்  வெளியிடப்பட்டுள்ளது.

2019 சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகள், கடந்த 2020ம் ஆண்டு ஆகஸ்ட் 4ம் தேதி வெளியிடப்பட்டது. இதில் ஐஏஎஸ், ஐஎப்எஸ், ஐபிஎஸ், மத்திய அரசுப் பணிகளின் ஏ மற்றும் பி பிரிவுகள் ஆகிவற்றில் 927 காலிப்பணியிடங்களுக்கு 829 பேர் பரிந்துரைக்கப்பட்டனர்.


சிவில் சர்வீஸ் தேர்வு விதிமுறைகளின் படி கடைசியாக பரிந்துரைக்கப்பட்ட நபருக்கும் கீழ், தகுதி அடிப்படையில் இருப்பு பட்டியலையும் பராமரிக்க வேண்டும்.

மீதமுள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப, மத்திய பணியாளர் மற்றும் பயிற்சி துறை கேட்டு கொண்டபடி, தற்போது 89 பேர் பரிந்துரை செய்யப்பபட்டுள்ளனர். இவர்களில் 73 பேர் பொதுப் பிரிவினர், 14 பேர் ஓபிசி பிரிவினர், ஒருவர் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவைச் சேர்ந்தவர், ஒருவர் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர். அவர்களின் விவரங்கள் https://static.pib.gov.in/WriteReadData/userfiles/full%20list%20(2).pdf என்ற இணைப்பில் உள்ளன.

அவர்களுக்கு மத்தியப் பணியாளர் மற்றும் பயிற்சித்துறை நேரடியாகவும் தகவல் தெரிவிக்கும்.

கீழ்கண்ட நான்கு பதிவு எண்களை கொண்ட நபர்களின் பரிந்துரை தற்காலிகமானது: பதிவு எண்: 0404736, 0835241, 2100323 and 6603686.

ஒரு விண்ணப்பதாரரின் முடிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

89 நபர்களின் பட்டியல் யுபிஎஸ் இணையளத்திலும் http//www.upsc.gov.in உள்ளது.

Post Top Ad