இன்னோவேட்டிவ் பாதசாலா பயிற்சியில் கலந்து கொண்ட ஆசிரியர்களுக்கு முதன்மைக் கல்வி அலுவலர் சான்றிதழ் வழங்கி பாராட்டு. - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Monday, January 11, 2021

இன்னோவேட்டிவ் பாதசாலா பயிற்சியில் கலந்து கொண்ட ஆசிரியர்களுக்கு முதன்மைக் கல்வி அலுவலர் சான்றிதழ் வழங்கி பாராட்டு.


 

புதுக்கோட்டையில் இணைய வழியில் நடைபெற்று வரும்  இன்னோவேட்டிவ் பாதசாலா பயிற்சியில் கலந்து கொண்ட ஆசிரியர்களுக்கு முதன்மைக் கல்வி அலுவலர் த.விஜயலட்சுமி சான்றிதழ் வழங்கி பாராட்டு.


புதுக்கோட்டை,ஜன.11: புதுக்கோட்டை மாவட்டத்தில் ஸ்ரீ அரவிந்தோ சொஸைட்டி மற்றும் தமிழ்நாடு சமக்ரஹ சிக்ஷா  இணைந்து அரசு தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு இணையவழி‌ மூலம் இன்னோவேட்டிவ் பாதசாலா  என்ற தலைப்பின் கீழ் அக்டோபர் மாதம் முதல் 12வாரங்களுக்கு புத்தாக்க பயிற்சி நடைபெற்று வருகிறது.  


இப்பயிற்சியில் புதுக்கோட்டை மாவட்டத்தை சார்ந்த சுமார்  84 தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் பங்கேற்று வருகின்றனர்.

இப்பயிற்சியை ஸ்ரீ அரவிந்தோ சொஸைட்டியின் பயிற்றுனர் மகேஷ் பாலன்  வழங்கி வருகிறார்.இதற்கான பயிற்சியில் கலந்து கொண்ட அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு ஜனவரி 11 திங்கள் கிழமை அன்று புதுக்கோட்டை  மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் நடைபெற்ற பாராட்டு  நிகழ்ச்சியில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்  த.விஜயலட்சுமி கலந்து கொண்டு பேசியதாவது:  ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியும் ஸ்ரீ அரபிந்தோ சொசைட்டியும் இணைந்து புதுமை பாடசாலை என்னும் சோதனை மூலம் கற்றல் கற்பித்தல் இணைய வழிப்பயிற்சியை 12 வாரங்கள் நமது மாவட்டத்தில் நடத்துகிறார்கள்.தற்பொழுது 8 வாரங்கள் முடிவுற்றுள்ளது.இன்னும் 4 வாரங்கள் மீதமுள்ளது.


இப்பெருந்தொற்று காலத்தில் ஆசிரியர்களுக்கும் ,பெற்றோர்களுக்கும் மற்றும் மாணவர்களுக்கும் கற்றல் இடைவெளி ஏற்படாமல் இருக்க ஸ்ரீ அரபிந்தோ சொசைட்டியால் நடத்தப்படும் இந்த புத்தாக்க பயிற்சியில் ஆர்வமுடன் பங்குபெற்ற உங்களையும் ,உங்களது பள்ளியையும் மாவட்டத்தில் முன்னிலைப்படுத்தியதற்கு எனது பாராட்டுக்கள்.இந்த பயிற்சியில் நீங்கள் கற்றுக் கொண்ட குழந்தைகளின் முன்னேற்றம்,கற்பனைத்திறன்,பெரியோர்களை மதித்தல் ,எப்பொழுதும் உற்சாகமாக இருத்தல் போன்ற ஆலோசனைகளை 1 முதல் 5 வகுப்புகள் வரை உங்கள் பள்ளியில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் சென்றடைய வேண்டும்.


மாற்றுத் திறன் கொண்ட குழந்தைகளின் கற்றல் திறனும் வெளிப்பட வேண்டும்.உங்களின் அனைத்து செயல்  திட்டங்களும் மாநில திட்ட இயக்குநர் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.இப்பயிற்சியை மாவட்டக் கல்வி அலுவலர்கள்,உதவி திட்ட அலுவலர் ,மாவட்ட ஒருங்கிணைப்பாளர்,மேற்பார்வையாளர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள் வாட்ஸ் அப் மூலம் கண்காணித்து வந்தார்கள்.இதன் மூலம் நீங்கள் அனைவரும் தேர்வு செய்யப்பட்டுள்ளீர்கள்.


நமது மாவட்டத்திலிருந்து சென்ற ஆண்டு நடந்த மாநில அளவில் நடைபெற்ற பாராட்டு விழாவில் 6 ஆசிரியர்கள் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அவர்களிடமிருந்து பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வாங்கி உள்ளார்கள் அவர்கள் அனைவரையும் இந்த நேரத்தில் பாராட்டுகிறேன்.


அதே போல் இந்த கல்வி இன்று சான்றிதழ் பெறக்கூடிய இந்த 38 ஆசிரியர்களும் மாநில மற்றும் தேசிய அளவில் உங்களது செயல்திட்டம் தேர்வு செய்யப்பட்டு டெல்லியில் சென்று பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை வென்று நமது மாவட்டத்திற்கு பெருமை சேர்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.


இந்த பயிற்சியினை வழங்கக்கூடிய ஸ்ரீ அரபிந்தோ சொசைட்டிக்கும் அந்நிறுவன கருத்தாளர் திரு.மகேஷ்பாலன் அவர்களுக்கும் மாவட்டக் கல்வித்துறை சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.விழாவில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் உதவி திட்ட அலுவலர் இரா.இரவிச்சந்திரன்,மாவட்ட பயிற்சி ஒருங்கிணைப்பாளர் மெ.ரெகுநாததுரை ,ஸ்ரீஅரபிந்தோ சொசைட்டியின் கருத்தாளர் அஃப்சல்  ஆகியோர் கலந்து கொண்டனர்.இப்பயிற்சியானது புதுக்கோட்டை மாவட்டம் மட்டும் அல்லாது மதுரை, ராமநாதபுரம்,கன்னியாகுமரி , சிவகங்கை, விருதுநகர்

போன்ற தமிழகத்தில் உள்ள 16 மாவட்டங்களிலும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.


இப்பயிற்சியினை ஸ்ரீ அரவிந்தோ சொஸைட்டியின் மாநில ஒருங்கிணைப்பாளர் கருணாகரன்  தகவலின்பேரில் பேரில்  மார்ச் 2021 வரை  வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

Post Top Ad