அரசு பள்ளியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நேரில் ஆய்வு


 

சேவூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் கல்வித்துறை அமைச்சர் கே. ஏ. செங்கோட்டையன் இன்று நேரில் ஆய்வு செய்தார். 


கரோனா பொது முடக்கத்தையடுத்து, தற்போது 10 மற்றும் 12 ஆம் வகுப்புகள் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் சேவூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார். 

அப்போது அவர், பள்ளி ஆசிரியை, ஆசிரியர்கள், மாணவ மாணவிகளை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். 


இதைத்தொடர்ந்து செய்தியாளரிடம் அவர் கூறியது, திருப்பூர் மாவட்டத்தில்  அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள்,  தனியார் பள்ளிகள் என மொத்தம் 400 பள்ளிகள் தற்போது திறக்கப்பட்டுள்ளது.


கரோனா பொது முடக்கம் காரணமாக மாணவர்கள் எளிதில், பொதுத் தேர்வை எதிர்கொள்ளும் வகையில், பாடத்திட்டங்களும் குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல மாணவர்களுக்கு போதுமான முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளி கடைப்பிடித்தல், கிருமிநாசினி உபயோகித்தல் உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகள்  சிறந்த முறையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 


இதனை மாணவர்கள் நல்ல முறையில் பயன்படுத்தி எதிர்காலத்தில் சிறந்த முறையில் முன்னேற வாழ்த்துகள் என்றார். 


இதில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆர்.ரமேஷ்,  சேவூர் ஊராட்சி மன்ற தலைவர் சேவூர் ஜி. வேலுசாமி, முன்னாள் ஒன்றியக்குழு துணைத் தலைவர் பழனிச்சாமி, பள்ளி தலைமையாசிரியர் பாஸ்கர், முன்னாள் எம்எல்ஏ கருப்புசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.





0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Code

Blog Archive