தமிழகத்தில் பள்ளிகளுக்கு நேரில் வருகை புரியும் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு தினசரி உடல் வெப்பநிலையை கண்காணித்து, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்படுத்தி உள்ளது.
சேலம் மாவட்டத்தில் அடுத்தடுத்து 3 பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் அனைத்து பள்ளிகளிலும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை தீவிரமாக கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இது தொடர்பாக CEO கூறுகையில், தேனி மாவட்டத்தில் உள்ள 218 உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் 95% மாணவர்கள் நேரில் வர தொடங்கி உள்ளனர். அவர்களுக்கு கொரோனா தொற்று பரவாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மேலும் அனைத்து மாணவர்களுக்கும் தினசரி தெர்மல் ஸ்கேனர் வாயிலாக உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டு ஏதேனும் மாறுபாடு கண்டறியப்பட்டால், ஆக்சிஜன் சோதனை நடத்தப்படுகிறது. இரண்டு சோதனைகளிலும் சராசரியை விட வித்தியாசம் காணப்பட்டால் மருத்துவமனைக்கு நேரில் அழைத்து சென்று மாணவர்களை பரிசோதிக்குமாறு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
தற்போது வரை மாணவர்களுக்கு பாதிப்போ, அறிகுறியோ கண்டறியப்படவில்லை. தினமும் பள்ளிகள் கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்யப்படுகின்றன. மாணவர்கள் பள்ளியில் நடந்து கொள்வது குறித்து தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.