பள்ளி ஆசிரியர்களுக்கு. தமிழக அரசு அதிரடி உத்தரவு.!!! - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Friday, January 15, 2021

பள்ளி ஆசிரியர்களுக்கு. தமிழக அரசு அதிரடி உத்தரவு.!!!


தமிழகத்தில் நிதியை பயன்படுத்தி மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. 

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது பற்றி மாணவர்களின் பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டது. அதில் பெரும்பாலான பெற்றோர்கள் பள்ளிகள் திறப்பதற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து பொங்கலுக்கு பிறகு தமிழகத்தில் ஜனவரி 19ஆம் தேதி 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் தமிழக அரசு வெளியிட்டது. இந்நிலையில் மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்திற்காக நிதி ஒதுக்கீடு செய்து பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 

தமிழகத்தில் மொத்தம் 6173 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு தலா 500 ரூபாய் வீதம் 30,86,500 ரூபாயும், 31,297 அரசு தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகளுக்கு தலா 500 ரூபாய் வீதம் 1.56 கோடி ரூபாயும் விடுவிக்கப்பட்டுள்ளது. 

நிதியை பயன்படுத்தி மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Post Top Ad