இக்னோ தொலைதூரக் கல்வி மாணவர் சேர்க்கை அவகாசம் மீண்டும் நீட்டிப்பு


இக்னோ எனப்படும் இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வி மாணவர் சேர்க்கை அவகாசம் மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
ந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் இளநிலை, முதுநிலை, பட்டய மற்றும் சான்றிதழ் படிப்புகளுக்கு ஜனவரி 2020 பருவத்துக்கான மாணவர் சேர்க்கை ஆன்லைன் மூலம் நடைபெறுகிறது. இதில், விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி ஜன.20-ம் தேதியாக இருந்தது. இந்நிலையில் மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் ஜனவரி 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தொலைதூரக் கல்வி படிப்புகளில் சேர விரும்புவோர் https://ignouadmission.samarth.edu.in/என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம். இளநிலை, பட்டய மற்றும் சான்றிதழ் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் எஸ்சி, எஸ்டி விண்ணப்பதாரர்களுக்கு கட்டண விலக்கு அளிக்கப்படுகிறது. மாணவர் சேர்க்கை தொடர்பான கூடுதல் விவரங்களை சென்னை வேப்பேரி பெரியார் திடலில் அமைந்துள்ள இக்னோ பல்கலைக்கழக மண்டல அலுவலகத்தை அணுகலாம். மேலும், 044-26618438, 26618039 ஆகிய தொலைபேசி எண்களிலும் தொடர்புகொள்ளலாம். இற்கிடையே பல்வேறு பல்கலைக்கழகங்களில் இளங்கலை, முதுகலை, செமஸ்டர் அடிப்படையிலான படிப்புகளுக்கு சமர்த் இணையதளத்தில் ஆன்லைன் வகுப்புகளு எடுக்கப்பட்டு வருகின்றன. விருப்பமுள்ள் மாணவர்கள் ignou.samarth.edu.in என்ற இணைய முகவரியில் முன்பதிவு செய்து, ஆன்லைன் படிப்புகளில் கலந்துகொள்ளலாம்.




0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Blog Archive