வாட்ஸ் அப்'க்கு பதிலாக 'சிக்னல்' செயலியை நாடும் பயனர்கள்.. ஏன் தெரியுமா? - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Friday, January 8, 2021

வாட்ஸ் அப்'க்கு பதிலாக 'சிக்னல்' செயலியை நாடும் பயனர்கள்.. ஏன் தெரியுமா?

'
உலகில் அதிகளவிலான மக்களால் தொலைத்தொடர்புக்காக பயன்படுத்தப்பட்டு வருவது வாட்ஸ்அப் செயலிதான். கிட்டத்தட்ட இரண்டு பில்லியனுக்கும் அதிகமானவர்கள் வாட்ஸ் அப்பை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் வரும் பிப்ரவரி மாதத்திற்குள் வாட்ஸ்அப் தனது பயனர்களின் சுய விவரங்களை ஃபேஸ்புக் தளத்தில் பதிவிடுமாறு வற்புறுத்தி வருகிறது.

வாட்ஸ் அப் நிறுவனத்தை ஃபேஸ்புக் நிறுவனம் கடந்த 2014-இல் வாங்கி இருந்தது. எண்டு டூ எண்டு என்க்ரிப்ஷன் மூலமாக 2016-இல் வாட்ஸ் அப் பிரபலமானது. இதனை ஓபன் விஸ்பர் சிஸ்டமுடன் இணைந்து சிக்னல் என்க்ரிப்டட் மெசேஜிங் புரோட்டோக்கால் மூலமாக கொண்டுவந்திருந்து வாட்ஸ் அப்.

இந்த நிலையில்தான் சிக்னல் மெசேஜிங் அப்ளிகேஷன் அறிமுகமாகியுள்ளது. வாட்ஸ் அப்பை விடவும் சிக்னல் செயலியில் அதிகளவிலான பாதுகாப்பு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

வாட்ஸ் அப்பை போலவே வீடியோ, ஆடியோ, போட்டோ, மற்றும் குரூப் மெசேஜிங் வசதி இதிலும் உள்ளது. பாதுகாப்பு அம்சங்களும் இதில் அதிகம் என்பதால் வாட்ஸ் அப் பயனர்கள் சிக்னல் செயலியை பயன்படுத்த தொடங்கியுள்ளனர். அதனால் பெரும்பாலானோர் சிக்னல் செயலிக்கு மாறி வருவதாகவும் தெரிகிறது. உலகின் நம்பர் ஒன் பணக்காரர் எலோன் மஸ்கும் சிக்னல் செயலியைa பயன்படுத்த சொல்லி உள்ளார்.

Post Top Ad