பள்ளி வேலை நாள் எத்தனை நாள் ? - அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்.




‘  ஈரோடு மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு - தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மற்றும் ஆலோசனை கூட்டம் கோபியில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் மாவட்ட கலெக்டர் கதிரவன் தலைமையில் நேற்று நடந்தது. இதில் கலந்து கொண்ட பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது:- 


கொரோனா வைரஸ் உள்ள காலத்தில்கூட துணிந்து, நேற்று (நேற்று முன்தினம்) பள்ளிகள் திறக்கப்பட்டது. அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் முதல் நாளே 92 சதவீத மாணவர்கள் வந்துள்ளனர். ஞாயிறு தவிர அனைத்து நாட்களும் பள்ளிகள் நடைபெறும். அரசு விடுமுறை நாட்கள், பண்டிகை நாட்களில் மட்டும் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்படும். பள்ளி வேலை நாட்களை நீட்டிப்பது குறித்து முதலமைச்சர்தான் முடிவெடுக்க வேண்டும். சட்டமன்ற தேர்தல் அட்டவணையை பொறுத்தே பள்ளி வேலை நாளும் பொதுத்தேர்வும் இருக்கும் என்றார்.





0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Code

Blog Archive