இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, இந்தப் புதிய விதிமுறையை ஜனவரி 1 முதல் அமல்படுத்தியுள்ளது. .
’பாசிட்டிவ் பே சிஸ்டம்’ என்ற புதிய கான்செப்ட் கொண்டுவரப்பட்டுள்ளது. இதில், உயர் மதிப்பு காசோலை பரிவர்த்தனைகள் கூடுதல் பாதுகாப்பு பெறுகின்றன. அதாவது, ரூ.50,000க்கும் மேற்பட்ட பணத்தை காசோலை மூலமாகப் பரிவர்த்தனை செய்யும் போது காசோலை வழங்கியவர் மற்றும் பரிவர்த்தனை தொடர்பான தகவல்களை மீண்டும் உறுதிப்படுத்த வேண்டும். பயனாளியின் பெயர், பணம் செலுத்துவோரின் பெயர், தொகை, காசோலை எண், தேதி உள்ளிட்ட விவரங்களை வழங்க வேண்டும்.
இந்தப் புதிய விதிமுறை ஜனவரி 1 முதல் அமலுக்கு வருகிறது. இதன் மூலம் காசோலை பரிவர்த்தனைகள் பாதுகாக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விதிமுறையில் காசோலை வழங்கியவர்கள் காசோலை தொடர்பான விவரங்களை எஸ்எம்எஸ், மொபைல் செயலி, இண்டர்நெட் பேங்கிங், ஏடிஎம் போன்றவற்றின் வாயிலாக வழங்க வேண்டியிருக்கும். ஆகஸ்ட் மாதத்தில் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் வெளியிட்டிருந்த அறிவிப்பில், காசோலைப் பரிவர்த்தனைகளில் பாதுகாப்பு அம்சங்களைப் பலப்படுத்த பசிட்டிவ் பே சிஸ்டம் கொண்டுவரப்படும் என்று கூறியிருந்தார் என்பது நினைவுகூரத்தக்கது.
காசோலை பரிவர்த்தனைகளில் நிதி மோசடிகள் அதிகமாக இருப்பதைக் கருத்தில் கொண்டு, இதில் பாதுகாப்பு அம்சத்தைப் பலப்படுத்தும் விதமாக இந்த புதிய மாற்றம்.