பள்ளி திறப்பின் போது வேண்டியவை மற்றும் செய்யக் கூடாதவை - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Friday, January 15, 2021

பள்ளி திறப்பின் போது வேண்டியவை மற்றும் செய்யக் கூடாதவை


பள்ளி திறக்கும் நாள் : 19.01.2021 செய்யக்கூடியவை ( பள்ளிகளில் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் ) 
1. அனைவரும் முகக்கவசம் அணிதல் . 
2. கைகளை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்தல் . 
3. பள்ளிக்கு வரும்போதும் , முற்பகல் இடைவேளை , மதிய உணவு இடைவேளை , பிற்பகல் இடைவேளை மற்றும் வீட்டிற்கு செல்லும் போதும் கைகளை சோப்பு கொண்டு கழுவுதல் வேண்டும் . 
4. சமூக இடைவெளி கடைபிடித்தல் 
5. சமூக இடைவெளியைப் பின்பற்றும் பொருட்டு தரையில் வட்டம் / கட்டம் போன்ற குறியீடுகள் வரைதல் . 
6. ஒரு வகுப்பிற்கு 25 மாணவர்கள் மட்டும் அனுமதி அளித்தல் . 
7. தெர்மல் ஸ்கேனர் ( THERMAL SCANNER ) கொண்டு உடல் வெப்பநிலை பரிசோதித்தல் . 8. பல்ஸ் - ஆக்சிமீட்டர் பயன்படுத்த அறிந்திருத்தல் . 
9. வைட்டமின் மற்றும் துத்தநாக ( ZINC ) மாத்திரைகளை உரிய முறையில் மாணவர்கள் சாப்பிடுவதை உறுதி செய்தல் . 
10. ஆசிரியர்கள் , அலுவலகப் பணியாளர்கள் அனைவரும் அடையாள அட்டை அணிந்திருத்தல் , 
11. பள்ளிக்கல்வித்துறையால் வெளியிடப்பட்டுள்ள கோவிட் -19 - SOP ஐ ஆசிரியர்கள் முழுமையாக தெரிந்திருத்தல் . 
12. பள்ளி வளாகத்தில் அதிக அளவிலான குப்பைத் தொட்டிகளை வைத்தல் . 
13. கோவிட் -19 தொடர்பான விழிப்புணர்வு வாசகங்கள் சுவரொட்டிகள் , பதாகைகள் ஆகியவை பள்ளி வளாகத்தில் வைத்திருத்தல் . 
14. அருகாமையிலுள்ள சுகாதார நிலையத்தின் அவசர தொடர்பு எண்களை அறிந்திருத்தல் . 
15. வகுப்பிற்கு ஒரு ஆசிரியரை பொறுப்பாளராகவும் , அனைத்து பணிகளையும் மேற்பார்வையிட பள்ளிக்கு ஒரு ஆசிரியரை பொறுப்பாளராகவும் நியமித்தல் பள்ளி திறக்கும் நாள் : 19.01.2021 . செய்யக்கூடாதவை : ( பள்ளிகளில் தவிர்க்கப்படவேண்டியவை . ) 
1.. 25 மாணவர்களுக்கு மேல் ஒரு வகுப்பறையில் அனுமதிக்கக்கூடாது . 
2.பள்ளி வளாகத்தில் எச்சில் துப்புதல் கூடாது , கழிவறை செல்லும் நேரம் , உணவு இடைவேளைகளில் கூட்டம் 
3 . கூடுதலை தவிர்த்தல் . 
4 . உணவு , தண்ணீர் பாட்டில்கள் , எழுதுபொருட்களை பரிமாறிக் கொள்ளுதல் கூடாது . 
5 . இறைவணக்கக் கூட்டம் , கலாச்சார நிகழ்வுகள் , உடற்கல்வி / NSS / NCC / தவிர்க்கப்படவேண்டும் . 
6 . மாணவர்கள் வகுப்பறைகளுக்கு வெளியே சுற்றித் திரிதல் கூடாது . 7. வகுப்பறையில் ஆசிரியர்கள் , மாணவர்கள் , முகக்கவசம் அகற்றுதல் கூடாது , 
8 . முகக் கவசம் உள்ளிட்ட கழிவுப் பொருட்களை பொது வெளியில் எறிதல் கூடாது . 
9 . மூடிய வகுப்பறைகளில் கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள் தவிர்த்தல் , 
10 . தூய்மையற்ற முகக் கவசம் அணிதல் கூடாது . 
11 . கைக்குட்டை , மெல்லிழைத்தாள் பயன்படுத்தாமல் பொதுவெளியில் இருமல் , தும்மல் கூடாது . 
12. பயோமெட்ரிக் ( BIOMATRIC ) கைரேகை பதிவு கூடாது . 
13 . குடிநீர் தொட்டிகளை சுத்தம் செய்யாமல் வைத்திருக்கக்கூடாது . 
14. தேவையற்ற பார்வையாளர்களை நுழைய அனுமதித்தல் கூடாது .

Post Top Ad