தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் வேலை.


தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

சென்னையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் நிரப்பப்பட உள்ள உதவி புரோகிராமர் பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம்: தமிழ்நாடு தகவல் ஆணையம்

பணி: உதவி புரோகிராமர் (Assistant Programmer)

சம்பளம்: மாதம் ரூ.35,900 - 1,13,500

தகுதி: அறிவியல், புள்ளியியல், பொருளாதாரம், வணிகவியல் துறையில் இளநிலை பட்டம் மற்றும் கம்யூட்டர் அப்பிளிகேசன் பிரிவில் முதுகலை டிப்ளமோ முடித்து சம்மந்தப்பட்ட துறையில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: http://www.tnsic.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள மாதிரி விண்ணப்பம்போன்று விண்ணப்பம் தயார் செய்து, பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 29.01.2021

மேலும் வயதுவரம்பு, தேர்வு செய்யப்படும் முறை போன்ற விவரங்கள் அறிய http://www.tnsic.gov.in/pdf/notification.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்




0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Code

Blog Archive