வாட்ஸ்ஆப் விதிமுறைகளை ஏற்காவிட்டால் செயலி அழிந்துவிடும்: பிப்.8 முதல் நடைமுறை: - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Wednesday, January 6, 2021

வாட்ஸ்ஆப் விதிமுறைகளை ஏற்காவிட்டால் செயலி அழிந்துவிடும்: பிப்.8 முதல் நடைமுறை:


புது தில்லி: வாட்ஸ்ஆப் பயன்பாட்டாளர்களுக்கு புதிய விதிமுறைகள் அறிவிக்கப்பட உள்ளது. அவற்றுக்கு ஒப்புதல் அளித்தால் மட்டுமே தொடர்ந்து செயலியை பயன்படுத்த முடியும், இல்லையென்றால் அது அழிந்துவிடும்.

வாட்ஸ்ஆப் விதிக்கும் விதிமுறைகளை ஏற்காவிட்டால், செயலியை பயன்படுத்த முடியாத நிலை உருவாகும் என்றும், இது பிப்ரவரி 8-ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, வாட்ஸ்ஆப்-பில் வரும் தகவல்களை சாதாரணமாக நிராகரிக்காமல், நன்கு படித்துப் பார்த்து ஒப்புதல் அளித்தால் மட்டுமே வாட்ஸ்ஆப் பயன்பாட்டாளராக நீடிக்க முடியும்.

காலத்துக்கு ஏற்ப பல்வேறு பல புதிய சேவைகளைப் பயன்பாட்டாளர்களுக்கு வாட்ஸ்ஆப் அவ்வப்போது மேம்படுத்தி வருகிறது.

ஆனால் தற்போது புதிய விதிமுறைகளுக்கு ஒப்புதல் தெரிவித்தால் மட்டுமே வாட்ஸ்ஆப்பை தொடர்ந்து பயன்படுத்த முடியும் என்று முதல்முறையாக அந்த நிறுவனம் கட்டுப்பாடுகளை விதிக்க உள்ளது.

இதுதொடர்பான அறிவிப்பை வாட்ஸ்ஆப் வெளியிட்டுள்ளது. வாட்ஸ்ஆப்பில் பகிரப்படும் தகவல்களும், பயன்பாட்டாளர்களின் தரவுகளும் பாதுகாப்பானதல்ல என்று வெளியான செய்திகளால் உலகம் முழுவதும் இந்த செயலியைப் பயன்படுத்தும் பயன்பாட்டாளர்கள் அதிர்ச்சிக்கு உள்ளானார்கள். இதை வாட்ஸ்ஆப் நிறுவனம் மறுத்துள்ளது.

ஆனாலும் இந்த விவகாரம் வாட்ஸ்ஆப் நிறுவனத்துக்கு பல்வேறு நாடுகளில் சட்டச் சிக்கல்களை ஏற்படுத்திவிட்டது.

இந்நிலையில், பயன்பாட்டாளர்களுக்கு இதுதொடர்பான புதிய விதிமுறைகளை அறிவித்து, அவற்றுக்குப் பயன்பாட்டாளர்கள் ஒப்புதல் தெரிவித்தால் மட்டுமே வாட்ஸ்ஆப்பைத் தொடர்ந்து பயன்படுத்த முடியும் என்றும் இல்லையென்றால் வாட்ஸ்ஆப் செயலி அழிந்துவிடும் என்றும் புதிய எச்சரிக்கை தகவல் வெளியாக உள்ளது என்று வாட்ஸ் ஆப் பீட்டாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2021, பிப்ரவரி 8-ஆம் தேதி முதல் புதிய விதிமுறைகள் அமலுக்கு வரும் என்றும் அதற்கு முன்பு எச்சரிக்கைத் தகவல் வெளியாகும் என்றும் புதிய விதிமுறைகள் அமலுக்கு வந்த பிறகு, அதைக் கண்டிப்பாக ஏற்றுக் கொண்டால்தான் வாட்ஸ்ஆப்பைப் பயன்படுத்த முடியும் என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

வாட்ஸ் ஆப்பில் வழக்கமாக வரும் ஏராளமான தகவல்களைப்போல், புதிய விதிமுறைகளுக்கு ஒப்புதல் அளிக்கும் தகவலையும் கருதாமல் வரும் நாள்களில் பயன்பாட்டாளர்கள் விழிப்புடன் இருந்து செயல்பட வேண்டும்.

இதேபோல், இணைய வழி வாட்ஸ்ஆப் மூலம் தொலைபேசி அழைப்பு, விடியோ அழைப்பு ஆகியவற்றை மேற்கொள்வது தொடர்பாக அந்த நிறுவனம் சோதனை செய்து வருகிறது. இந்த புதிய சேவைகள் இணையவழி வாட்ஸ்அப்பில் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Post Top Ad