யோகா மற்றும் இயற்கை மருத்துவப் படிப்பிற்கான கவுன்சிலிங் வரும், 7ம் தேதி துவங்குகிறது.
இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறையின் கீழ், அரும்பாக்கம் அரசு கல்லுாரியில், 60 இடங்கள்; 17 தனியார் கல்லுாரிகளில், 1,053 அரசு ஒதுக்கீட்டு இடங்கள்உள்ளன. அதேபோல, நிர்வாக ஒதுக்கீட்டுக்கு, 557 இடங்கள் உள்ளன.இந்த இடங்களுக்கு, பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில், மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.
இந்த படிப்புகளுக்கு விண்ணப்பித்தவர்களில், 2,002 பேர் தரவரிசை பட்டியலில் இடம் பெற்று உள்ளனர். இதற்கான மாணவர் சேர்க்கை, வரும், 7 முதல், 12ம் தேதி வரை, சென்னை அரும்பாக்கம், சித்தா மருத்துவமனை வளாகத்தில் நடைபெற உள்ளது. முதல் நாள் காலை, சிறப்பு பிரிவு மாணவர்களுக்கும், நண்பகல் முதல், பொது பிரிவு மாணவர்களுக்கும் கவுன்சிலிங் நடைபெறும். மேலும் விபரங்களை, https://tnhealth.tn.gov.inஎன்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
0 Comments:
Post a Comment