'குடிசை மாற்று வாரியத்தில், 53 அலுவலக உதவியாளர் பணிக்கு, வரும், 31க்குள் விண்ணப்பிக்கலாம்' என, அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில், மத்திய, மாநில அரசுகளின் நிதியில், குடிசை மாற்று வாரியம், பல்வேறு குடியிருப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த வாரியத்தில், காலியாக உள்ள, 53 அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இப்பணியிடங்கள், நேரடி நியமனம் வாயிலாக நிரப்பப்பட உள்ளன.இதற்கான விண்ணப்பங்களை, வாரியத்தின், www.tnscb.org என்ற, இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, வரும், 31க்குள் அனுப்ப வேண்டும் என, குடிசை மாற்று வாரியம் அறிவித்து உள்ளது.
Home »
» குடிசை மாற்று வாரியத்தில் 53 அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்
0 Comments:
Post a Comment