கொரோனா அச்சம் காரணமாக மூடப்பட்ட அங்கன்வாடிகளை திறக்க உத்தரவிடக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, கட்டுப்பாட்டு மண்டலங்களைத் தவிர நாடு முழுவதும் அங்கன்வாடி மையங்களைத் திறப்பது குறித்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் ஜனவரி 31ம் தேதிக்குள் முடிவெடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து உணவை வழங்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.