பிகார் மாநிலத்தில் உள்ள பள்ளியில் 22 மாணவர்கள் மற்றும் 3 ஆசிரியர்களுக்கு வெள்ளிக்கிழமை கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது
கரோனா பொதுமுடக்கத்தால் மூடப்பட்ட பள்ளிகள் 9 மாதங்களுக்கு பிறகு கடந்த திங்கள்கிழமை(ஜன.4) பிகாரில் உள்ள பள்ளிகள் திறக்கப்பட்டன.
இந்நிலையில், முங்கர் மாவட்டத்தில் உள்ள பள்ளியில் 22 மாணவர்கள் மற்றும் 3 ஆசிரியர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதியாகியுள்ளது.
இதுகுறித்து சதர் மருத்துவமனையின் மருத்துவர் அஜய் குமார் பாரதி கூறியதாவது,
பள்ளி உள்ள அசர்கஞ்ச் பகுதியை கரோனா கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அப்பகுதியில் பரிசோதனை செய்வதற்கு மருத்துவக்குழு அனுப்பப்பட்டுள்ளது எனக் கூறினார்.
0 Comments:
Post a Comment