10 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களின் பள்ளி திறப்பு பற்றி கருத்து கேட்பு கூட்டத்தை 08.01.2021க்குள் நடத்தி முடிக்க வேண்டும்.
நாடு முழுவதும் கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் மூடப்பட்ட பள்ளிகள் இன்றளவும் திறக்கப்படவில்லை. இந்தியாவில் ஓரிரு மாநிலங்களில் இன்று (04.01.2021) பள்ளிகள் திறக்கப் பட்டது எனவே இதைத் தொடர்ந்து தமிழகத்தில் பள்ளிகள் திறக்கலாமா வேண்டாமா பற்றிய கருத்து கேட்புக் கூட்டத்தை அனைத்து பள்ளிகளும் 08.01.2021க்குள் நடத்தி முடிக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளில் பயிலும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களின் பெற்றோர்களை அழைத்து பொங்கலுக்கு பிறகு பள்ளிகளை திறக்கலாமா வேண்டாமா என்பதைப் பற்றி கருத்துக்களை கேட்குமாறு தமிழக அரசானது தற்பொழுது ஒரு அரசாணையை வெளியிட்டுள்ளது ,
0 Comments:
Post a Comment