தேர்தல் பணியாளர்களுக்கு ஊதியம் தர நிதி ஒதுக்கீடு



ஓட்டுச்சாவடிகளில், தேர்தலன்று பணியாற்றும் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க, 71.21 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
தஞ்சை மாணவர்களிடையே தீவிரமடையும் கொரோனா பரவல்! - புதிதாக 8 மாணவர்கள், 2 ஆசிரியர்களுக்கு தொற்று உறுதி..!!
தமிழக சட்டசபை தேர்தல் மற்றும் கன்னியாகுமரி லோக்சபா தொகுதி இடைத்தேர்தல், வரும், 6ம் தேதி நடக்க உள்ளது. அன்று வாக்காளர்கள் ஓட்டளிப்பதற்காக, 88 ஆயிரத்து, 937 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன.ஒவ்வொரு ஓட்டுச்சாவடியிலும், ஆறு ஊழியர்கள் பணியில் இருப்பர். அவர்களுக்கும், இதர தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கும் ஊதியம் வழங்க, முதல் கட்டமாக, 71.21 கோடி ரூபாயை, அரசு ஒதுக்கி உள்ளது.மாணவர்கள் கூடுதல் திறமைகளை வளர்த்து கொள்ள வேண்டும்: பேராசிரியர் குணசேகரன் அறிவுறுத்தல்
ஓட்டுச்சாவடி தலைமை அலுவலருக்கு, 1,700 ரூபாய் முதல், கடை நிலை ஊழியர்களுக்கு, 600 ரூபாய் வரை, அவர்களின் நிலைக்கேற்ப ஊதியம் வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணிதேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவல் துறை, வனத்துறை, தீயணைப்பு துறை, ஊர்க்காவல் படை, சிறைத்துறை, மத்திய ஆயுதப்படை போலீசார், மாநில ஆயுதப்படை போலீசார் ஆகியோருக்கும் ஊதியம் வழங்க, 21.53 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது.இதில், இன்ஸ்பெக்டர்கள் நிலையில், 400 ரூபாய்; ரிசர்வ் போலீசாருக்கு, 150 ரூபாய் வீதம், அவர்களின் நிலைக்கேற்ப, நான்கு நாட்களுக்கு வழங்க உத்தரவிடப்பட்டு உள்ளது.





0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Code

Blog Archive