M.phil Incentive நிதித்துறை ஒப்புதல் அளித்த ஆணைக்கு காலம் தாமதம் ஏன்: பட்டதாரி ஆசிரியர்கள் வலியுறுத்தல்:



திண்டுக்கல்: 'ஊக்க ஊதிய உயர்வு பெற, ஊதியப் பட்டியலுக்கு நிதித்துறை ஒப்புதல் அளிக்க தாமதிக்கூடாது' என, உயர்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் வலியுத்தியுள்ளது.


மாநில செய்தி தொடர்பாளர் முருகேசன் அறிக்கை: 2020 மார்ச் 10க்கு முன் உயர் கல்விஅல்லது துறைத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்று நிர்வாக காரணங்கள் அல்லது தனிநபரின் தாமதமான கோரிக்கையால் ஊக்க ஊதிய உயர்வு பெறாதவர்கள் வரும் மார்ச் 31க்குள் நிதித் துறை ஒப்புதல் பெற்று ஊக்க ஊதிய உயர்வு பெறலாம் என அரசு அறிவித்திருந்தது.இதனால் கடந்த நவம்பரில் முதன்மைக் கல்வி அலுவலகம் மூலம் தகுதி உள்ளவர்கள் பட்டியல் மற்றும் நிலுவைத் தொகைக்கு நிதித்துறை ஒப்புதல் பெற அனுப்பி வைக்கப்பட்டுஉள்ளது.ஊக்க ஊதிய உயர்வு பெற இம்மாதம் 31-ஆம் தேதியே கடைசி என அரசாணை உள்ளது. ஆனால் இதுவரை நிதித்துறை ஒப்புதல் கிடைக்காமல் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.ஊக்க ஊதியத்திற்காக முறையான அனுமதியுடன் உயர்கல்வி பயின்று, மதிப்பெண் சான்றிதழ், உண்மை தன்மை சான்றிதழ், பட்டச் சான்றிதழ் பெற்ற ஆசிரியர், அரசு ஊழியர்கள் பட்டியலை கருவூலத்துறையினர் நிதித்துறை ஒப்புதல் அளிக்கவில்லை எனக்கூறி திருப்பி அனுப்புகின்றனர். எனவே, ஒப்புதல் ஆணையை தாமதிக்காமல் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்

.





0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Code

Blog Archive