தெற்கு ரயில்வேயில் வேலை - விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 12.09.2019 - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Friday, August 16, 2019

தெற்கு ரயில்வேயில் வேலை - விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 12.09.2019

தெற்கு ரயில்வேயில் வேலை - விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 12.09.2019


தெற்கு ரயில்வேயின் சென்னையில் ஒப்பந்தகால அடிப்படையில் நிரப்பப்பட உள்ள 2393 பணியிடங்களுக்கு முன்னாள் ராணுவத்திற்கான சிறப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு ராணுவத்தில் 15 ஆண்டு சேவையாற்றி ராணுவ வகுப்பு-1 சான்றிதழ் அல்லது அதற்கு சமமான தகுதி பெற்று ஓய்வு பெற்ற முன்னாள் ராணுவத்தினரிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

பணியிடம்: சென்னை

பணி: Trackman, Helper (Track Machine), Helper (Tele), Helper (Signal), Pointsman 'B' (SCP), Helper (C&W), Helper/Diesel Mechanical, Helper/Diesel Electrical, Helper/TRD - Ex-Servicemen in Level 1

காலியிடங்கள்: 2393

தகுதி: இந்திய ராணுவத்தில் 15 ஆண்டு சேவையாற்றி ராணுவ வகுப்பு-1 சான்றிதழ் அல்லது அதற்கு சமமான தகுதி பெற்று ஓய்வு பெற்ற முன்னாள் ராணுவத்தினர் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயதுவரம்பு: 13.08.2019 தேதியின்படி 50 வயதிற்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: http://rrcmas.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://onlinedatafiles.s3.amazonaws.com/docs/RRC_CHENNAI_EXMAN_CONTRACT_NOTIFICATION.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 12.09.2019


Post Top Ad