ரூ.11,900 ஊதியத்தில் கூட்டுறவு வங்கியில் வேலை - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Wednesday, August 28, 2019

ரூ.11,900 ஊதியத்தில் கூட்டுறவு வங்கியில் வேலை

ரூ.11,900 ஊதியத்தில் கூட்டுறவு வங்கியில் வேலைதருமபுரி மாவட்டத்தில் கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்படும் தருமபுரி கூட்டுறவு நகர வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

காலிப் பணியிடங்கள்:

உதவியாளர் பிரிவில் 07 பணியிடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி:

ஏதாவது ஒரு பட்டப்படிப்புடன் கூட்டுறவுப் பயிற்சி முடித்திருக்க வேண்டும். தமிழ்மொழியை ஒரு பாடமாக படித்து தேர்ச்சி பெற்றிக்க வேண்டும். கணினி அறிவு பெற்றிருத்தல் வேண்டும்.

ஊதியம்:

மாதம் ரூ.11,900 முதல் ரூ.32,450 வரை வழங்கப்படும்.

வயதுவரம்பு:

18 வயதிற்கு மேல் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்:

பொது மற்றும் ஓபிசி விண்ணப்பத்தாரர்களுக்கு கட்டணம் ரூ.250 மற்ற அனைத்து விண்ணப்பத்தாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணத்தில் விலக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை:

எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைனில் www.drbdharmapuri.net என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://drbdharmapuri.net/recruitment/admin/images/Dharmapuri%20UB%20Advertisement166266_1565268354.pdf என்ற இணையதளத்தில் சென்று அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 05.09.2019


Post Top Ad