ஆசிரியர் தகுதி தேர்வு முடிவு 20 நாட்களில் வெளியிடப்படும் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

ஆசிரியர் தகுதி தேர்வு முடிவு 20 நாட்களில் வெளியிடப்படும் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி


அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது:-தமிழகம் முழுவதும் 412 இலவச நீட் பயிற்சி மையங்கள் அடுத்த வாரம் முதல் தொடங்கப்படும். இதுவரை நீட் தேர்வு பயிற்சிக்காக 20 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்து இருக்கின்றனர்.

அடுத்த ஆண்டு முதல் சாரண-சாரணியர் இயக்க மாணவர்களுக்கு இலவசமாக சீருடைகள் வழங்கப்படும். பள்ளி மாணவர்கள் கைகளில் வண்ணக்கயிறு கட்டும் விவகாரத்தில், பள்ளிகளில் ஏற்கனவே இருக்கும் நடைமுறைகளையே பின்பற்ற வேண்டும் என்பது தான் எங்களுடையகொள்கை.ரத்து செய்யப்பட்ட பாலிடெக்னிக் விரிவுரையாளர்கள் தேர்வு விரைவில் நடத்தப்படும். அரசு பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கும் பட்சத்தில், பகுதிநேர ஆசிரியர்களை முழுமையாக பயன்படுத்திக்கொள்ளப்படுவார்கள். ஆசிரியர் தகுதி தேர்வு (‘டெட்’) முடிவுகள் இன்னும் 20 நாட்களில் வெளியிடப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்





0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Code

Blog Archive