3 கல்வி மாவட்ட அதிகாரிகள் பணியிடம்நிரப்பப்படுமா? EMIS-ல் மாணவர் விவரம் பதிவேற்றுவதில் தாமதம் - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Monday, August 26, 2019

3 கல்வி மாவட்ட அதிகாரிகள் பணியிடம்நிரப்பப்படுமா? EMIS-ல் மாணவர் விவரம் பதிவேற்றுவதில் தாமதம்



3 கல்வி மாவட்ட அதிகாரிகள் பணியிடம்நிரப்பப்படுமா? EMIS-ல் மாணவர் விவரம் பதிவேற்றுவதில் தாமதம்

கடலுார் மாவட்டத்தில்,

காலியாக உள்ள 3 கல்வி மாவட்ட அதிகாரிகள் பணியிடங்களை நிரப்ப கல்வித் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.கடலுார் மாவட்டத்தில் 1,600க்கும் மேற்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் துவக்கம், நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன.

கடலுார் மாவட்டம் கடலுார், வடலுார், சிதம்பரம், விருத்தாசலம் என, நான்கு கல்வி மாவட்டங்களை உள்ளடக்கியது. இதில், கடலுார் கல்வி மாவட்டஅதிகாரி பணியிடம் மட்டும் நிரப்பப்பட்டுள்ளது.ஆனால், வடலுார், சிதம்பரம் கல்வி மாவட்ட அதிகாரிகள் பணியிடம் கடந்த இரண்டு மாதங்களாகவும், விருத்தாசலம் கல்வி மாவட்ட அதிகாரி பணியிடம் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக நிரப்பப்படாமல் காலியாக உள்ளது.

பள்ளியில் அடிப்படை வசதிகள், மாணவர் சேர்க்கை, நலத்திட்ட உதவிகள் பெறும் மாணவ, மாணவியரின் எண்ணிக்கை, ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியரின் வருகை பதிவேடு, ஆசிரியர்கள், ஊழியர்களின் சம்பள பட்டியல், பள்ளியின் வரவு-செலவு கணக்குகள், தேர்ச்சி சதவீதத்தை உயர்த்த மேற்கொள்ளும் பணிகள், மாணவர்களிடையே ஏற்படும் மோதலை தடுப்பது, ஆசிரியர்களின் கற்பித்தல் பணியை ஆய்வு செய்வது உள்ளிட்ட விவரங்களை பள்ளிக் கல்வி இயக்குனர், முதன்மைக் கல்வி அதிகாரி, மாவட்ட கல்வி அதிகாரி ஆகியோரின் பார்வைக்காக கல்வித் துறையின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்வது, தலைமை ஆசிரியரின் பணியாகும்.இதுபோன்ற நிலையில், தலைமை ஆசிரியர்கள் மூவர், கல்வி மாவட்ட அதிகாரிகளாக பொறுப்பு வகிப்பதால், அவர்கள் பள்ளியில் நடக்கும் கல்வி சார்ந்த மற்றும் இதர நிகழ்வுகள் குறித்த விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்வதில் சிக்கல் ஏற்படுகிறது. இதனால், அவர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகளை, உதவி தலைமை ஆசிரியர்களிடம் ஒப்படைத்து விட்டு, மற்ற பள்ளிகளுக்கு அடிக்கடி ஆய்வுக்காக சென்று விடுகின்றனர். ஆனால், உதவி தலைமை ஆசிரியர்களோ பள்ளியில் நடக்கும் நிகழ்வுகள் குறித்த விவரங்களை கண்காணித்து தெரிவிப்பதில் ஆர்வம் காட்டுவதில்லை.

இதற்கு, ஆசிரியர்கள் போதிய ஒத்துழைப்பு அளிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால், அந்த பள்ளிகளில் நடக்கும் எந்த நிகழ்வும், பள்ளிக் கல்வி இயக்குனர், முதன்மைக் கல்வி அதிகாரி ஆகியோரின் கவனத்திற்கு செல்வதில் தாமதம் ஏற்படுகிறது. குறிப்பாக, மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் கிடைப்பதிலும் தாமதம் ஏற்படுகிறது.கல்வி மாவட்ட அதிகாரிகளாக பணிபுரியும் மூவர், வேறு வழியின்றி மற்ற பள்ளிகளில் ஆய்வு பணிக்காக செல்வது மட்டுமின்றி, அவர்கள் பள்ளியில் நடக்கும் நிகழ்வுகள் குறித்த தகவலை அவ்வப்போது கண்காணிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதால், மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.எனவே, காலியாக உள்ள வடலுார், சிதம்பரம், விருத்தாசலம் கல்வி மாவட்ட அதிகாரிகள் பணியிடங்களை நிரப்ப முதன்மைக்கல்வி அலுவலகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Post Top Ad