பொறியியல் படிப்புகளுக்கு வழக்கம் போல கணிதம், இயற்பியல் பாடங்கள் முக்கியம் : பல்டி அடித்த ஏஐசிடிஇ; குழப்பத்தில் மாணவர்கள்!




இளநிலை பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கு இயற்பியல் மற்றும் கணிதம் ஆகிய பாடங்கள் படிக்க கட்டாயமில்லை என்ற அறிவிப்பை அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் (ஏஐசிடிஇ) திரும்பப் பெற்றுள்ளது.பொறியியல் மற்றும் தொழில்நுட்ப படிப்புகளுக்கு 2021-22 கல்வி ஆண்டுக்கான பாடத்திட்டங்களுக்கான ஒப்புதல் கையேடுவை ஏஐசிடிஇ வெளியிட்டது. அதில் இளநிலை பொறியியல் மற்றும் தொழில்நுட்ப படிப்புகளுக்கு கணிதம், இயற்பியல் பாடங்கள் கட்டாயமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இளநிலை பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான கல்வி தகுதிகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.


அதன்படி, இயற்பியல், கணிதம், வேதியியல், கணினி அறிவியல், மின்னணுவியல், தகவல் தொழில்நுட்பம், உயிரியல், உயிரி தொழில்நுட்பம், விவசாயம், தொழிற்படிப்புகள், இன்பர்மேட்டிக்ஸ் ப்ராக்டிசஸ் , இன்ஜியனிரிங் கிராபிக்ஸ் , பிசினஸ் ஸ்டடிஸ் , தொழில்முனைவோர் ஆகிய பாடங்களில் ஏதாவது மூன்றை படித்திருந்தாலே பொறியில் படிப்புகளில் சேரலாம் என ஏஐசிடியூ தெரிவித்துள்ளது.வரும் 2021-22 கல்வி ஆண்டில் இந்த நடைமுறை செயல்பட்டுக்கு வரும் எனவும் ஏஐசிடிஇ அறிவித்துள்ளது. கணிதம், இயற்பியல் பாடங்களை தவிர பிற பாடங்களை எடுத்து பொறியியல் படிப்பில் சேரும் மாணவர்களுக்கு பல்கலைக்கழகங்கள் இணைப்பு படிப்பு ஒன்றை நடத்தும். பிளஸ் டூ தேர்வில் 45 சதவிகிதத்திற்கும் மேல் மதிப்பெண் எடுப்பவர்கள் பொறியியல் படிப்புகளில் சேரலாம். பட்டியல் இன மாணவர்கள் 40% எடுத்தால் போதும் என்றும்  கூறப்பட்டுள்ளது.


பொதுவாக ப்ளஸ் 2வில் கணிதம், இயற்பியல், வேதியல் ஆகிய பாடங்களை முதன்மை  பாடங்களாக எடுத்து படித்தால் தான் இளநிலை பொறியியல் மற்றும் தொழில்நுட்ப  படிப்புகளில் சேர முடியும். இந்த நிலையில் பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கு இயற்பியல் மற்றும் கணிதம் ஆகிய பாடங்கள் படிக்க கட்டாயமில்லை என்ற ஏஐசிடிஇ புதிய முடிவுக்கு கல்வியாளர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து தற்காலிகமாக அறிவிப்பை திரும்பப் பெறுவதாக ஏஐசிடிஇ தெரிவித்துள்ளது. பொறியியல் படிப்புகளுக்கு வழக்கம் போல கணிதம், இயற்பியல் பாடங்கள் முக்கியம் என தெரிவித்துள்ளது.





0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Code

Blog Archive