புதிதாக சேரும் உறுப்பினர்களுக்கு பிஎப் திட்டத்தில் 8.5 சதவீத வட்டி இல்லை: இபிஎப்ஓ அமைப்பு அறிவிப்பு : - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Monday, March 8, 2021

புதிதாக சேரும் உறுப்பினர்களுக்கு பிஎப் திட்டத்தில் 8.5 சதவீத வட்டி இல்லை: இபிஎப்ஓ அமைப்பு அறிவிப்பு :


 

தொழிலாளர் நல நிதியத்தில் (இபிஎப்) புதிதாக சேரும் உறுப்பினர்களுக்கு ஏற்கெனவே அளிக்கப்படும் வட்டி விகிதம் உள்ளிட்ட சலுகைகள் அளிக்கப்படாது.

தாமாக முன்வந்து இபிஎப் நிதியில் உறுப்பினராக சேர்வோரது கணக்குகள் தனியாக பராமரிக்கப்படும். இத்தகைய புதிய நிதி தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றுஇத்துறையைச் சேர்ந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஏற்கெனவே இபிஎப் நிதியத்தில் உறுப்பினர்களாக உள்ள வாடிக்கையாளர்களுக்கு இந்த நிதித் தொகுப்பாக சேர்ந்துள்ள ரூ.10 லட்சம் கோடியிலிருந்து கிடைக்கும் பலன்கள் அளிக்கப்படுகிறது.

2021-ம் நிதி ஆண்டுக்கு இபிஎப் வட்டி விகிதம் 8.5 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சிறுசேமிப்புத் திட்டங்களுக்கு அதிகபட்சம் 7 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. இந்நிலையில் இபிஎப் உறுப்பினர்களுக்கு கூடுதலாக 1.5 சதவீத வட்டி கிடைக்கிறது.

புதிதாக இபிஎப் திட்டத்தில் சேர்வோரது கணக்கைத் தனியாக பராமரிக்க முடிவு செய்யப்பட்டு அது குறித்த ஆலோசனை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தனி கணக்கு

நீண்ட கால முதலீடாக தங்களது சேமிப்பை போடும் இபிஎப்உறுப்பினர்களுக்குக் கிடைக்கும் பணப் பலன்களை புதிதாகசேர்வோருக்குக் கிடைக்கச் செய்வது சரி யான அணுகுமுறையாக இருக்காது என்பதால் தனியாக கணக்கை பராமரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறினர்.

தேசிய ஓய்வூதிய திட்டத்தை (என்பிஎஸ்) போல சுய தொழில் புரிவோரும் உறுப்பினர்களாக இபிஎப் திட்டத்தில் சேரலாம். விருப்பமுள்ளவர்கள் சேமிப்பை தொடர்வதற்கு வசதியாக பிரத்யேக கணக்கு தொடங்கப்பட உள்ளது. இந்த நிதியத்தில் சேரும் தொகையின் அடிப்படையில் உறுப்பினர்களுக்கு பணப் பலன் அளிக்கப்படும். அதேபோல இந்த உறுப்பினர்கள் தங்களது சேமிப்புத் தொகையை திரும்ப எடுப்பதற்கு புதிய விதிமுறைகள் வகுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.

தனியாக நிதியம் ஏற்படுத்த தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி மற்றும் இதர செலவின சட்டத்தில் திருத்தங்கள் செய்ய வேண்டியுள்ளது. இபிஎப் நிதியில் ஊழியர்களின் பங்களிப்பு 12 சதவீதமாகவும், தொழில் நிறுவனங்களின் பங்களிப்பு 12 சதவீதமாகவும் உள்ளது. இதன் அடிப்படையில் ஓய்வூதியம் வழங் கப்படுகிறது.

2020-ம் ஆண்டு சமூக பாதுகாப்பு நடைமுறையின்படி நாட்டு மக்கள் அனைவருக்கும் உரிய நிதி பாதுகாப்பை வழங்க தனியாக திட்டம் வகுக்க வழிவகை செய்துள்ளது. இதன் படி சுய தொழில்புரிவோர் உள்ளிட்டவர்களும் இபிஎப்ஓ மூலம் பலன் பெற நடவடிக்கை எடுக் கப்படுகிறது.

தனி நிதியம் அமைக்க முடிவு

முறைசாரா தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களும் பயன் பெறும்வகையில் இதற்கென தனியாக ஒரு நிதியத்தை உருவாக்கி செயல்படுத்த முடிவு செய்யப்பட்டு அதற்கான விதிமுறைகள் வகுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.

நாட்டில் உள்ள 50 கோடி தொழிலாளர்களில் 10 சதவீதம் பேர் மட்டுமே முறைசாரா பணிகளில் ஈடுபட்டுள்ளனர். மற்றவர் களுக்கு சமூக பாதுகாப்பு ஏதும்கிடைப்பதில்லை. இதைக் கருத்தில் கொண்டு தனி நிதியம் உருவாக்கி அதில் அனைவரும் சேமிக்க வழி வகை செய்யப்பட்டு வருகிறது.

Post Top Ad