கூகுள் பே செயலியில் தவறுதலாக அனுப்பப்பட்ட ரூ.35 ஆயிரத்தை மீட்டுக் கொடுத்த சைபர் கிரைம் போலீஸார் :



சென்னை, பெரம்பூரைச் சேர்ந்தவர் தாவிது (50). டிராவல்ஸ் நிறுவன ஊழியரான இவர் வங்கி ஒன்றில் கணக்கு வைத்துள்ளார்.

இவர் கடந்த மாதம் 3-ம் தேதி கூகுள் பே செயலி மூலம் ரூ.35 ஆயிரத்தை ஆன்லைனில் பரிவர்த்தனை செய்தபோது, தவறுதலாக வேறொரு நபரின் வங்கி கணக்கில் பணத்தை செலுத்தியுள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இதுகுறித்து உடனடியாக கீழ்ப்பாக்கம் காவல் துணை ஆணையரின் சைபர் கிரைம் பிரிவில் புகார் அளித்தார். இதையடுத்து போலீஸார் துரிதமாக செயல்பட்டு வங்கி நிர்வாகத்திடம் பேசி பணத்தை மீட்டுக் கொடுத்தனர்.

இதேபோல் சென்னை, பெரவள்ளூர், செல்லியம்மன் காலனியைச் சேர்ந்த கவுதம் சுரேஷ் (26) என்பவர் தனது வங்கி கணக்கில் இருந்து பணப் பரிவர்தனை செய்யாத நிலையில் அவரது வங்கி கணக்கிலிருந்து ரூ.99 ஆயிரம் சட்ட விரோதமாக பண பரிவர்தனை செய்யப்பட்டிருந்தது. அந்த பணத்தையும் கீழ்ப்பாக்கம் சைபர் கிரைம் போலீஸார் மீட்டுக் கொடுத்துள்ளனர்.

இப்படி கடந்த 7 மாதங்களில், கீழ்ப்பாக்கம் சைபர் கிரைம் போலீஸார் ஆன்லைன் மூலம் பணம் இழந்தவர்களுக்கு ரூ.10 லட்சத்து 56 ஆயிரத்தை மீட்டுக் கொடுத்துள்ளனர்.






0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Code

Blog Archive