மின் வாரியத்தில், 2,900 கள உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்! - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Friday, March 12, 2021

மின் வாரியத்தில், 2,900 கள உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்!


மின் வாரியத்தில், 2,900 கள உதவியாளர் பணிக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம், வரும், 15ம் தேதியுடன் முடிவுஅடைகிறது. தமிழக மின் வாரியத்தில், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள் உள்ளதால், ஊழியர்களுக்கு, கூடுதல் பணிச்சுமை ஏற்பட்டு உள்ளது. 

இதனால், மின் சாதன பழுதுகளை சரிசெய்வது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வதற்காக, 2,900 கள உதவியாளர் பதவிக்கு, ஆட்களை தேர்வு செய்வதற்கு, 2020 மார்ச், 19ல் அறிவிப்பாணை வெளியிடப்பட்டது. ஊரடங்கால், விண்ணப்பம் பெறும் பணி, ஒத்தி வைக்கப்பட்டது. ஏற்கனவே அறிவித்தபடி, 2,900 கள உதவியாளர் பதவிக்கு, நடப்பாண்டு, பிப்., 15ம் தேதி முதல், விண்ணப்பிக்கலாம் எனவும், விண்ணப்பிக்க, மார்ச், 16ம் தேதி, கடைசி நாள் எனவும், மின் வாரியம், அம்மாதம், 12ம் தேதி அறிவித்தது. பணம் செலுத்த, மார்ச், 19ம் தேதி கடைசி நாள்.இந்த தேர்வு விபரம், பலருக்கு தெரியவில்லை.
தேர்வுக்கு விண்ணப்பிக்க, மின் வாரியம் வழங்கிய அவகாசத்திற்கு, இன்னும் மூன்று நாட்கள் மட்டுமே உள்ளது. எனவே, இதுவரை விண்ணப்பிக்காதவர்கள், கள உதவியாளர் தேர்வுக்கு விரைந்து விண்ணப்பிக்கலாம்.

Post Top Ad