மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு ஆகஸ்ட் 1ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘எம்.பி.பி.எஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கான 2021ம் ஆண்டு நீட் தேர்வு, ஆகஸ்ட் 1ம் தேதி நடைபெறும்.
இந்த நுழைவுத்தேர்வு உரிய விதிமுறைகளுடனும், வழிகாட்டுதலுடனும் ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளபடி நடைபெறும்.
இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட 11 மொழிகளில் நடத்தப்படும் நீட் தேர்வில் பேனா, காகிதம் முறை தொடரும். தேர்வு தொடர்பான மற்ற தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படும்,’ என கூறப்பட்டுள்ளது.