அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில், ஆசிரியர்கள் நியமனத்துக்கு ஒப்புதல் வழங்க, பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
அரசு உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர் காலியிடங்களை நிரப்ப, கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாக, பள்ளிக் கல்வித் துறை அனுமதி அளிக்கவில்லை.
இதுகுறித்து, சென்னை உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் ஆகியவற்றில், பல்வேறு வழக்குகளும் நடந்தன.
இந்நிலையில், நீதிமன்ற உத்தரவின்படி, அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஆசிரியர் காலியிடங்களை நிரப்பலாம் என, பள்ளிக் கல்வி மற்றும் தொடக்க கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பான வழிகாட்டுதல்களை, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, பள்ளிக் கல்வி கமிஷனரகம் அனுப்பியுள்ளது.
இதன்படி, தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், மேல்நிலை பள்ளி முதுநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஒப்புதல் அளிக்கலாம் என, கூறப்பட்டுள்ளது.