பள்ளி கல்வித்துறையுடன் ஐ.ஐ.டி., ஒப்பந்தம் - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Wednesday, April 5, 2023

பள்ளி கல்வித்துறையுடன் ஐ.ஐ.டி., ஒப்பந்தம்

Tamil_News_large_3286090.jpg?w=360&dpr=3

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு தேவையான உதவிகளை வழங்க, சென்னை ஐ.ஐ.டி.,க்கும், பள்ளிக் கல்வித் துறைக்கும் இடையே, முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.


சென்னை ஐ.ஐ.டி.,யை கிராமப்புற மாணவர்கள் உட்பட, அனைத்து மாணவர்களுக்கும் சேர்க்கும் முயற்சியாக, அனைவருக்கும் ஐ.ஐ.டி.எம்., என்ற திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.


இதன் ஒரு பகுதியாக, அரசு பள்ளிகளைச் சேர்ந்த 250 மாணவர்களுக்கு, ஒரு வாரம் அடிப்படைக் கணிதம் மற்றும் அறிவியல் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.


அதேபோல், 250 பள்ளிகளைச் சேர்ந்த, 500 அறிவியல் ஆசிரியர்கள் பயிற்சி பெற்றனர். அவர்கள் வழியாக, ஒரு லட்சம் மாணவர்கள் பயன் பெறும் வகையில், மின்னணு செய்முறை பெட்டகங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.


இவற்றை நேற்று, சென்னை ஐ.ஐ.டி.,யில் நடந்த விழாவில், முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.


மேலும் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு தேவையான உதவிகளை வழங்க, சென்னை ஐ.ஐ.டி.,க்கும், பள்ளிக் கல்வித் துறைக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.


இத்திட்டங்களின் தொடர்ச்சியாக, 'தமிழக முதல்வரின் திறனறித் தேர்வு' என்ற புதிய திட்டத்தை, முதல்வர் அறிவித்தார்.


இதில், 10ம் வகுப்பு படிக்கும் 1,000 மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர். அவர்கள் பிளஸ் 1, பிளஸ் 2 முடிக்கும் வரை, ஒவ்வொரு மாதமும், 1,000 ரூபாய் உதவித் தொகை வழங்கப்படும். அவர்களுக்கு ஐ.ஐ.டி., போன்ற முன்னணி கல்வி நிறுவனங்களில், தொடர் பயிற்சிகள் வழங்கப்படும்.


இத்திட்டத்தில் தேர்வு செய்யப்படும் மாணவர்கள், அவர்களின் உயர் கல்வியை தொடரும்போது, ஒவ்வொரு ஆண்டும் 12 ஆயிரம் ரூபாய் வீதம், கல்வி உதவித் தொகை வழங்கப்படும்.


இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் உதயநிதி மகேஷ், சுப்ரமணியன், சென்னை ஐ.ஐ.டி., இயக்குனர் காமகோடி, பள்ளிக் கல்வித் துறை முதன்மை செயலர் காகர்லா உஷா கலந்து கொண்டனர்.

Post Top Ad