அரசு கலை கல்லுாரிகளில் சில பாடப்பிரிவுகள் நீக்கம்

அரசு கலை அறிவியல் கல்லுாரிகளில் குறைவான மாணவர் சேர்க்கை உள்ள, சில பாடப்பிரிவுகளை நீக்கி, புதிய பாடப்பிரிவு துவங்கப்படும்,'' என, சட்டசபையில் நேற்று உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி கூறினார்.


அவர் வெளியிட்ட அறிவிப்புகள்:


அனைத்து உயர் கல்வி நிறுவனங்களிலும், கற்றல் மேலாண்மை அமைப்பு மென்பொருள் 150 கோடி ரூபாய் மதிப்பில் நிறுவப்படும்


சென்னை, கோவையில் மின்னணுவியல் மற்றும் தொடர்பியல்; கரூரில் நெசவு தொழிநுட்பம்; கோவையில் கம்ப்யூட்டர் இன்ஜினியரிங்; விழுப்புரத்தில் இயந்திரவியல் பட்டய படிப்புகள், அரசு பாலிடெக்னிக் கல்லுாரிகளில் துவங்கப்படும்


சென்னை, கிண்டி அண்ணா பல்கலை வளாகத்தில் உள்ள விடுதிகளில், 108 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இணையதள வசதி ஏற்படுத்தப்படும்


மதுரை காமராஜர் பல்கலையில், பி.எஸ்சி., கம்ப்யூட்டர் சயின்ஸ் - டேட்டா சயின்ஸ்; பி.எஸ்சி., கம்யூட்டர் சயின்ஸ் - சைபர் செக்யூரிட்டி; பி.காம்., பிளாக் செயின் டெக்னாலஜி; எம்.எஸ்சி., - ஆர்ட்டிபிஷியல் இன்டர்லிஜன்ஸ்; எம்.எஸ்சி., - மெஷின் லேனிங் ஆகிய ஐந்து புதிய பாடப்பிரிவுகள் துவங்கப்படும்


சென்னை பல்கலை நுாற்றாண்டு விழா மண்டபம், பழமை மாறாமல் புதுப்பிக்கப்படும். சேப்பாக்கம் வளாகத்தில் 250 மாணவியர் பயன் அடையும் வகையில் விடுதி கட்டடம் கட்டப்படும்


தமிழக ஆவணக் காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சி துறையில், ஆராய்ச்சி மேற்கொள்ளும் மாணவர்களுக்கு மாதம் 10 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும்


அரசு கலை அறிவியல் கல்லுாரிகளில் குறைவான மாணவர் சேர்க்கை உள்ள ஒரு சில பாடப்பிரிவுகளை நீக்கி, புதிய பாடப்பிரிவு துவங்கப்படும்.


இவ்வாறு அமைச்சர் கூறினார்.





0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Code

Blog Archive