பயோ டெக்னாலஜி படிப்புக்கான கேட்-பி நுழைவுத் தேர்வு: விண்ணப்பிக்க அவகாசம் இன்றுடன் நிறைவு - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Wednesday, April 5, 2023

பயோ டெக்னாலஜி படிப்புக்கான கேட்-பி நுழைவுத் தேர்வு: விண்ணப்பிக்க அவகாசம் இன்றுடன் நிறைவு

971121

முதுநிலை பயோ டெக்னாலஜி படிப்புகளுக்கான கேட்-பி நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் இன்றுடன் (ஏப்.5) நிறைவு பெறுகிறது.


நாடு முழுவதும் உள்ள உயர்கல்வி நிறுவனங்களில் முதுநிலை உயிரி தொழில்நுட்பம் படிப்புகளில் (பயோ டெக்னாலஜி) சேருவதற்கு கேட்-பி என்ற தேசிய நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும். மேலும், பயோ டெக்னாலஜி துறையில் இளநிலை ஆராய்ச்சி படிப்புக்கான மத்திய அரசின் உதவித் தொகை பெறுவதற்கு மாணவர்கள் பிஇடி எனும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவது அவசியமாகும்.


இந்த தேர்வுகள் ஆண்டுதோறும் தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, நடப்பாண்டுக்கான கேட்-பி மற்றும் பிஇடி தேர்வுகள் ஏப். 23-ம் தேதிகணினிவழியில் நடத்தப்பட உள்ளது. இதற்கான இணைய விண்ணப்பப்பதிவு கடந்த மார்ச் 14-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.


இந்நிலையில், விண்ணப்பிக்கும் கால அவகாசம் இன்றுடன் (ஏப்.5) நிறைவு பெறுகிறது. எனவே, விருப்பமுள்ள மாணவர்கள் dbt.nta.ac.in என்ற இணையதள வழியாக துரிதமாக விண்ணப்பிக்க வேண்டும். தேர்வுக் கட்டணமாக பொதுப் பிரிவினர் ரூ.1,200, எஸ்சி /எஸ்டி பிரிவினர் ரூ.600 செலுத்த வேண்டும்.


இதுதவிர தேர்வுக்கான பாடத்திட்டம், ஹால்டிக்கெட் வெளியீடு உள்ளிட்ட கூடுதல் விவரங்களை http://www.nta.ac.in/என்ற வலைதளத்தில் அறியலாம். ஏதேனும் சந்தேகம் இருப்பின் 011-40759000 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று என்டிஏ தெரிவித்துள்ளது.

Post Top Ad