TRUST Exam 2022 - Date Announced - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Tuesday, November 1, 2022

TRUST Exam 2022 - Date Announced

 








அரசுத் தேர்வுகள் இயக்ககம், சென்னை - 6

ஊரகத் திறனாய்வுத் தேர்வு (TRUST EXAM), DECEMBER 2022 தமிழ் நாடு ஊரகப் பகுதி மாணவர்களுக்கான திறனாய்வுத் தேர்விற்கு விண்ணப்பிப்பதற்கான

அறிவுரைகள்

தேர்விற்கு விண்ணப்பிப்பதற்கான தகுதிகள் :

2022-2023-ம் கல்வியாண்டில் அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் பயிலும் ஒன்பதாம் வகுப்பு மாணவ / மாணவியர்கள், 2022 டிசம்பர் மாதம் 10-ஆம் தேதி (சனிக்கிழமை) நடைபெறவுள்ள ஊரகத் திறனாய்வுத் தேர்விற்கு (TRUST) விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்படுகிறது.

1. அரசு ஆணை (நிலை) எண். 960, கல்வித் (இ2) துறை, நாள் 11.10.91 ன் படி ஊரகப் பகுதிகளில் (அதாவது கிராமப்புற பஞ்சாயத்து, நகர பஞ்சாயத்து மற்றும் டவுன்சிப்), அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் 2022-2023 கல்வியாண்டில் 9-ம் வகுப்பு பயிலும் மாணவ மாணவியர் இத்திறனாய்வு தேர்வு எழுதுவதற்கு தகுதி உடையவராவார்கள்.

2. இத்தேர்விற்கு விண்ணப்பிக்கும் தேர்வரின் பெற்றோர் / பாதுகாவலரின் ஆண்டு வருமானம் ரூ.1,00,000 /- மிகாமல் உள்ளது என்பதற்கு வருவாய் துறையினரிடமிருந்து வருமான சான்று பெற்று அளித்தல் வேண்டும்.

3. தேர்விற்கு விண்ணப்பிக்கும் மாணவ, மாணவியர்கள் தேர்வுக்கான கட்டணம் ரூ, 5/ சேவைக் கட்டணம் ரூ.5/- மொத்தமாக ரூ. 10/- வீதம் Online மூலம் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன் பணமாக பள்ளி தலைமையாசிரியரிடம் ஒப்படைக்க வேண்டும்.

தேர்விற்கு விண்ணப்பிக்க 26.10.2022 முதல் 05.11.2022 வரை என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்குப் பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

ஒவ்வொரு வருவாய் மாவட்டத்திலும் தேர்ந்தெடுக்கப்படும் 100 தேர்வர்களுக்கு (50 மாணவியர் + 50 மாணவர்) 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை தொடர்ந்து படிக்கும் காலத்திற்கு படிப்புதவித் தொகை ஆண்டு தோறும் ரூ. 1000/- வீதம் வழங்கப்படும்.

குறிப்பு: நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளில் படிக்கும் மாணவ/மாணவிகள் விண்ணப்பிக்க இயலாது.

ஒம்/ அரசுத் தேர்வுகள் இயக்குநர், சென்னை-6.
TRUST Exam - 2022 Date Announced - PDF Download Here

Post Top Ad