IIT Admission Govt School Students - அரசு பள்ளியில் படித்த 87 மாணவர்கள் ஐஐடி யில் படிக்க தேர்வு: அமைச்சர் பெருமிதம் - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Sunday, November 6, 2022

IIT Admission Govt School Students - அரசு பள்ளியில் படித்த 87 மாணவர்கள் ஐஐடி யில் படிக்க தேர்வு: அமைச்சர் பெருமிதம்

 

அரசு பள்ளியில் படித்த 87 மாணவர்கள் ஐஐடி யில் படிக்க தேர்வாகியுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் சார்பில் ஜனவரி 2023 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் முதலாவது சென்னை பன்னாட்டுப் புத்தகத் திருவிழாவிற்கான இலச்சினையை (லோகோ) பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார்.

தொடர்ந்து மேடையில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி முதல்வரின் அறிவிறுத்தலின் படி முதலாவது சென்னை பன்னாட்டு புத்தகக்கண்காட்சிக்கான இலச்சினையை வெளியிட்டுள்ளோம் எனக் கூறினார். இந்நிலையில் வரும் ஜனவரி 16முதல் 18 வரை புத்தக்கண்காட்சி நடைபெறவுள்ளது. செஸ் ஒலிம்பியாட் போல் இதுவும் அறிவு சார்ந்தது எனக் கூறின்னர். மேலும் 700-800 புத்தக அங்காடிகளை BAPPASI- பபாசி( தென் இந்திய புத்தக பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கம்) அமைப்பார்கள் எனத் தெரிவித்தார்.

இந்த நிகழ்வை அடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர், அறிவு சார்ந்த செஸ் ஒலிம்பியாட் போல் இதும் அறிவுசார்ந்தது. ஜனவரி மாதம் 16-18ஆம் தேதி வரை நடைபெறுகிறது. முதல்வரின் இலட்சியம் தமிழகத்தினுடைய பதிப்புகளை உலகமுழுவதும் கொண்டு சேர்க்கவேண்டும் என்பது தான். இக்கண்காட்சியின் மூலம் உலகளாவிய புத்தகளை நாம் பெறுவதற்கும் நம் தமிழ் இலக்கியத்தை அவர்கள் மொழிப்பெயர்ப்பு செய்வதற்கும் இது உதவியாக இருக்கும். மேலும், தமிழ் படைப்பாளர்களின் எழுத்துகள் உலகம் முழுவதும் சென்று சேரும்.

இதற்காக 50 நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளோம் 20 நாடுகளை சேர்ந்தவர்கள் வருவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. அடுத்தடுத்த ஆண்டுகளில் கலந்து கொள்ளும் நாடுகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறோம். இதன் மூலம் தமிழ் படைப்பாளர்களின் எழுத்துக்கள் உலகம் முழுமைக்கும் சென்று சேரும்.

58 பள்ளிகளில் 190மாணவர்களை தேர்ந்தெடுத்து 30பேர் அதிலும் தாட்கோ மூலமாக படித்த மாணவர்கள் என மொத்தம் 87 பேர் ஐஐடி யில் பயில வாய்ப்பை பெற்றுள்ளனர். இது மிகப்பெரிய வெற்றி பெறக்கூடிய திட்டம் இதில் மாணவிகளும் அதிகளவில் உள்ளனர், எஸ்.சி.எஸ்டி மாணவ மாணவர்களும் இதில் உள்ளனர் கல்வி மட்டுமே சமத்துவத்தை ஏற்படுத்தும் என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், இந்த நாள் கல்வித்துறையின் பொன்னான நாள் நல்லக்கருத்துகளை தேடி நம்முடைய மக்களுக்கு வழங்குவதும், நம் படைப்புகளை வெளிக்கொண்டு செல்வதும் நம்முடைய கடமை என்றார். இதனையடுத்து மழைக்காரணமாக பள்ளிகளுக்கு அளிக்கப்படும் விடுமுறை குறித்த கேள்விக்கு பதிலளித்த, அமைச்சர் மழைக்காரணமாக விடுமுறை விடப்பட்ட நிலையில் சனிக்கிழமைகளில் ஈடு செய்யப்படும் எனக் கூறினார்.

Post Top Ad