பொறியியல் முதலாமாண்டு வகுப்புகள் வரும் 28 ஆம் தேதி முதல் தொடங்கும் என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
2022-2-23
ஆம் ஆண்டிற்கான பி.இ., பி.டெக் பொறியியல் படிப்புக்கான மாணவர்
சேர்க்கைக்கான 3 ஆவது சுற்று கலந்தாய்வுகள் நிறைவடைந்துள்ள நிலையில்,
முதலாமாண்டு வகுப்புகள் வரும் 28 ஆம் தேதி தொடங்கும் என அண்ணா
பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
மேலும், வகுப்புகளை தொடங்குவதற்கு ஏதுவாக அறிமுக வகுப்புகளை வரும் 14 ஆம் தேதியே நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டு மார்ச் மாத இறுதியில் செமஸ்டர் தேர்வுகள் தொடங்கும் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.